எடப்பாடி பழனிசாமி கடையை விரித்து வைத்துவிட்டு கூட்டணிக்கு அழைக்கிறார் வாங்க சார் வாங்க சார் என்று ஆனால் கூட்டணிக்கு யாரும் செல்லவில்லை காட்பாடியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.வேலூர் மாவட்டம், காட்பாடியில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு 1,336 பேருக்கு சுமார் ரூ.23 கோடி மதிப்பில் வீட்டுமனைபட்டா மற்றும் தையல் எந்திரம், மாற்று திறனாளர்களுக்கு மோட்டார் வாகனம் செயற்கை கைகால்கள் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் மற்றும் அரசு அதிகாரிகள் திரளானோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் எனது 50 ஆண்டுகால சட்டமன்ற உறுப்பினர் வாழ்க்கையில் இன்று தான் அதிக அளவு பட்டாக்களை நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குகிறேன்.

இம்மக்கள் பட்டா வேண்டி மரத்தடியில் அங்கும் இங்கும் வசித்தவர்கள் இனி நிம்மதியாக வாழ 1,3,36 பேருக்கு பட்டா வழங்குகிறேன். 23 கோடி மதிப்பீட்டில் அடுத்த வாரம் 5 ஆயிரம் பேருக்கு பொன்னை பகுதியில் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு பட்டா வழங்க இருக்கிறேன். ஆட்சி நடத்துகின்றவர்களும் அரசை நிர்வாகிக்கும் அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் அப்போதுதான் சிறப்பாக செயல்பட முடியும். தமிழக முதலமைச்சர் அவர்களின் எண்ணத்தை அறிந்து அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர் அதற்காக அரசு அதிகாரிகளை பாராட்டுகின்றேன்.
மக்களாகிய நீங்கள் வீடு கட்டி நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் இவ்வளவு பட்டாக்களை வழங்கிய அரசுக்கும்,மாவட்ட நிர்வாகத்திற்கும்,முதல்வருக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன் என கூறினாா்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி கோதாவரி இணைப்பு பற்றி ஒன்றும் தெரியாமல் ஊர் ஊராக எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார். மேலும் ஸ்டாலினுக்கு பைபை என அவ்வளவு தூரம் பேசுகிற எடப்பாடி பழனிசாமிக்கு காவிரி கோதாவரி இணைப்பு என்ன நிலைமையில் இருக்கிறது என்பதே தெரியாது. அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தாா். வேறு யாராவது திமுகவுக்கு வருவார்களா என்பது எனக்கு தெரியாது. எடப்பாடி பழனிசாமி கடையை விரித்து வைத்துவிட்டு கூட்டணிக்கு கூப்பிடுகிறார் ஆனால் யாரும் செல்லவில்லை. அதனால் தான் எடப்பாடி வாங்க சார் வாங்க சார் என கூப்பிடுகிறார். தமிழக முதல்வர் தற்போது நலமாக இருக்கிறார் என தெரிவித்தாா்.
பாகிஸ்தானுடன் இனி எந்தக் காலத்திலும் விளையாடக் கூடாது -முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா