சட்டீஸ்கரில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் 41 பதக்கங்களை வென்று தமிழ்நாடு வீரர்கள் அசத்தியுள்ளனா்.வாக்கோ இந்தியா கிக் பாக்சிங் ஃபெடரேஷன் சார்பில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஜூலை 16 முதல் இருபதாம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸியன் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் 12 தங்கம், 14 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன்ஸ் சிம்பிள் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தினர். இந்த வெற்றி கோப்பைகள் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய் அவர்கள் நேரில் வழங்கி கௌரவித்தார்.
மேலும், தங்க பதக்கம் வென்ற 12 வீரர்கள் அபுதாபி, UAE-ல் நடைபெற உள்ள உலக கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் – 2025 (Senior & Masters) போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெற்றி பெற்ற வீரர்கள் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். அப்போது பேசிய தமிழ்நாடு மாநில அமேச்சூர் கிக் பாக்சிங் சங்கம் (TNSKA) தமிழ்நாடு அணியின் தலைமை பயிற்சியாளர் பொதுச் செயலாளர் சி.சுரேஷ் பாபு பேசுகையில், சட்டீஸ்கரில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் 12 தங்கம் 14 வெள்ளி 15 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த கோப்பையில் மூன்றாவது இடத்தை நமது தமிழ்நாடு அணி புதிய சாதனையை படைத்துள்ளது.
இதில் 12 தங்க பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள் நவம்பர் மாதம் அபுதாபியில் நடைபெறவுள்ள உலக கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இந்த விளையாட்டுப் போட்டியில் நமது வீரர் வீராங்கனைகளின் முழு திறனும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போட்டி கடும் சவாலாக இருந்தது. இருந்தாலும் நமது பயிற்சியாளர்களின் தொடர் ஊக்கத்தின் காரணமாக இந்த போட்டிகளில் ஒட்டுமொத்த கோப்பையில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளனர்.

இந்தியாவிலிருந்து மொத்தம் 28 மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டதாகவும் அதில் 47 வீரர்கள் தமிழ்நாட்டில் இருந்து பங்கு பெற்றதாகவும் அவர் கூறினார். கடந்த ஆண்டு இரண்டாவது ஒட்டுமொத்த கோப்பையை நாம் வென்றுள்ளதாகவும் இந்த ஆண்டு நிறைய வீரர்கள் ஜூனியர் தகுதியிலிருந்து சீனியர் தகுதியாக மாறிவிட்டனர். அதனால் இந்த ஆண்டு பெரும் சவாலாக இருந்ததாகவும் கூறினார். பஞ்சாப் குஜராத் போன்ற மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு நம் வீரர்கள் கடும் சவாலாக இருந்தனர் என்று கூறினார்.
கிக் பாக்ஸிங் வீராங்கனை சுபாஷினி பேசுகையில் , தமிழ்நாட்டில் இருந்து 10 பெண்கள் போட்டியிட்டதாகவும் அதில் நான் இரு போட்டிகளில் கலந்து கொண்டதாகவும் ஒரு போட்டியில் தங்கமும் மற்றொரு போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்றதாகவும் கூறினார். மேலும் உலக கிக் பாக்ஸிங் சாம்பியன்ஸ் போட்டிக்கு தேர்வாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசியப் போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான ஊக்கத்தொகை கிடைக்கவில்லை என்றும் அது கிடைத்தால் அடுத்தடுத்த போட்டிகளில் பயன்பட உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் பெண்கள் கிக் பாக்ஸிங் விளையாடுவது மிகவும் கடினமாக உள்ளதாகவும் நமது மாநிலத்தில் தான் பெண்கள் இந்த விளையாட்டு விளையாடுவதில்லை என்றும் மற்ற மாநிலங்களில் நன்றாக ஊக்கத்துடன் விளையாடுவதாகவும் கூறினார்.
மேலும் வீரர்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு எங்களுக்கு நல்ல முறையில் ஊக்கம் அளிப்பதாகவும் தொடர்ந்து ஊக்கம் அளித்தால் நல்ல சாதனைகளை படைப்போம் என்றும் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு வீரர்களுக்கு கிக் பாக்ஸிங் ஸ்டேடியம் இல்லை எனவும் அதனை அமைத்து தரவும் தமிழ்நாடு விளையாட்டுத்துறைக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
மோகன்ராஜ் மரணம் கவனக்குறைவால் ஏற்பட்டது அல்ல – யூனியன் தலைவர் விளக்கம்