spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஒன்றிய அரசின் ஆயுதமாக மாறிய அமலாக்கத்துறை… முற்றுப் புள்ளி எப்போது?- அடுக்குக்காக கேள்விக் கணைகளை...

ஒன்றிய அரசின் ஆயுதமாக மாறிய அமலாக்கத்துறை… முற்றுப் புள்ளி எப்போது?- அடுக்குக்காக கேள்விக் கணைகளை தொடுத்த வீரமணி…

-

- Advertisement -

அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் ஆயுதமா? நீதிமன்ற உத்தரவுகளை மீறும் அமலாக்கத்துறை 2014ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததைவிட 500% அதிகமாக பண மோசடி வழக்குகள் பதிவு! அரசியல் வழக்குகளில் ஒன்று மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல் லாபங்களுக்காகவும், எதிர்க்கட்சிகளை மிரட்டவும், சி.பி.ஐ. அமலாக்கத்துறை, வருமான வரித் துறைகளைப் பயன்படுத்துவதற்கு முற்றுப் புள்ளி எப்போது? என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.ஒன்றிய அரசின்  ஆயுதமாக மாறிய அமலாக்கத்துறை… முற்றுப் புள்ளி எப்போது?- அடுக்குக்காக கேள்விக் கணைகளை தொடுத்த வீரமணி…

ஒன்றிய நிதி அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.

we-r-hiring

அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் ஆயுதமல்ல; அரசியலைத் தேர்தல் களத்தில் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் மீறி அமலாக்கத்துறை நடந்து கொள்ளலாமா? இதற்கு முற்றுப் புள்ளி எப்போது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஜனநாயகத்தின் படி மக்கள் ஆதரவு பா.ஜ.க.வுக்குப் போதிய அளவுக்குக் கிடைக்காத காரணத்தால், தேர்தலில் தோற்றாலும் ஜெயித்தாலும் தாங்களே எல்லாம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு, எதிர்க் கட்சியினரை அழிக்கவும் – ஒழிக்கவும், கட்சிகளை உடைப்பதற்கும் ஆர்எஸ்எஸ் திட்டப்படி எல்லாம் பி.ஜே.பி. மயம், எல்லாம் ஆர்.எஸ்.எஸ். மயம், எல்லாம் ஹிந்துராஷ்டிரா என்று ஆக்குவதற்கும் மக்கள் ஆதரவு பெற்று வெற்றி பெற்ற கட்சிக்காரர்களை எல்லாம் திரிசூலங்களை வைத்து தங்கள் வசப்படுத்துவதும், மிரட்டுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற காட்சி. பலமுறை இதனை நாம் வெளிப்படுத்தி இருக்கிறோம்.

இப்போதும் அதே தான் பயன்படுத்தப்படுகிறது. அந்த மூன்று திரிசூலங்களில் ஒன்று சி.பி.அய்., மற்றொன்று வருமானவரித் துறை, மூன்றாவது அமலாக்கத்துறை. (அமலாக்கத்துறை என்பதும் நிதித் துறையின் கீழேதான்). இவற்றை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களையெல்லாம் தங்கள் வயப்படுத்த வேண்டும் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிற சூழ்நிலையில், அமலாக்கத் துறையால் தொடுக்கப்படும் வழக்குகள் எப்படி அரசியல் நோக்கத்தோடு போடப்பட்டன என்பதை, உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் தொடர்ந்து சொல்லி வருகின்றன.ஒன்றிய அரசின்  ஆயுதமாக மாறிய அமலாக்கத்துறை… முற்றுப் புள்ளி எப்போது?- அடுக்குக்காக கேள்விக் கணைகளை தொடுத்த வீரமணி…கருநாடகாசித்தராமையா மீது தொடரப்பட்ட வழக்கிலேயே அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

“அரசியல் களத்தைத் தேர்தலில் வைத்துக் கொள்ள வேண்டும் – நீதிமன்றங்களில் அல்ல” என்று கருநாடகக் காங்கிரஸ் ஆட்சியின் முதலமைச்சர் சித்தராமையா மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றின் மேல்முறையீட்டு விசாரணையின்போது, ஒன்றிய அரசின் அமலாக்கத் துறைக்குக் கடும் கண்டனத்தை இரு தினங்களுக்கு முன்னால் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். நிலப் பரிவர்த்தனை தொடர்பான புகாரில் லோக் ஆயக்தா காவல்துறையினரால் வழக்கு தொடுக்கப்பட்டு, கருநாடகாவில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத் துறையும் அதே பிரச்சினைக்கு வழக்கு தொடுத்து சித்தராமையாவின் இணையர் உள்பட 5 பேரை விசாரணைக்கு அழைத்து அனுப்பிய அழைப்பாணையை ரத்து செய்து, கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஆணையிட்டார்.

அதை எதிர்த்து, அமலாக்கத் துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய், ஜஸ்டிஸ் கே.வினோத் சந்திரன் ஆகியோரின் அமர்வு இத்தகைய அரசியல் பிரச்சினைகளில் ஆர்வமாக அமலாக்கத் துறை தலையிடுவதேன் என்று கேள்வி எழுப்பி, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, கருநாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

மேலும், “கெடுவாய்ப்பாக, மகாராட்டிரத்தில் எனக்குச் சில அனுபவங்கள் இருக்கின்றன. தயவுசெய்து எங்களை ஏதாவது பேசும் நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள். இல்லையெனில், அமலாக்கத் துறை பற்றி கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு நாங்கள் வர நேரிடும். அரசியல் சண்டைகள் மக்களின் வாக்கெடுப்பில் தீர வேண்டியவை. அதற்கு அமலாக்கத் துறை ஏன் பயன்படுத்தப்பட வேண்டும்?” என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி.ஒன்றிய அரசின்  ஆயுதமாக மாறிய அமலாக்கத்துறை… முற்றுப் புள்ளி எப்போது?- அடுக்குக்காக கேள்விக் கணைகளை தொடுத்த வீரமணி…உச்சநீதிமன்றத்தின் கண்டனம் அமலாக்கத் துறைக்குத் தொடர்ந்து கொண்டே உள்ளது.

அமலாக்கத் துறையின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவிப்பது இது முதன் முறையன்று. கடந்த சில மாதங்களிலேயே பல முறை உச்சநீதிமன்றம், அமலாக்கத் துறையின் செயல்பாடுகள், போக்குகள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

டாஸ்மாக் கடைகள் ஒதுக்கீட்டில் 2014 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் முறைகேடு நடந்ததாகத் தமிழ்நாட்டில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடைபெற்றுவருகின்றன. இதில் திடீரென நுழைந்த அமலாக்கத் துறை, கடந்த மார்ச், மே மாதங்களில் முறையே டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும், அதன் மேலாண் இயக்குநர் இல்லம் உள்ளிட்ட இடங்களிலும் தேடுதல் வேட்டையை நடத்தியது. இது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய், ஜஸ்டிஸ் ஏ.ஜி.மாஷி ஆகியோர் அமர்வு, அமலாக்கத் துறை எல்லையைத் தாண்டிச் செயல்படுவதாகக் கண்டித்தது. அத்துடன், அமலாக்கத் துறையின் நடவடிக்கைகள், இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு மாறாகச் செயல்படுவதாகவும் எச்சரித்தது. (பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் (PMLA, 2002) கீழ் அமலாக்கத்துறை இதில் வழக்குப் பதிவு செய்திருந்தது.)ஒன்றிய அரசின்  ஆயுதமாக மாறிய அமலாக்கத்துறை… முற்றுப் புள்ளி எப்போது?- அடுக்குக்காக கேள்விக் கணைகளை தொடுத்த வீரமணி…உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதா?

1 (அ) இதே வழக்கின் தொடர்ச்சியாக இன்று (24.07.2025) ஏடுகளில் வெளிவந்துள்ள மற்றொரு செய்தி. டாஸ்மாக் வழக்கு தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர், தொழிலதிபர் ஒருவர்ஆகிய இருவர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்தது அமலாக்கத் துறை. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மேல் நடவடிக்கைகள் எடுக்க இடைக்காலத் தடை விதித்து, அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையும் மீறி, மீண்டும் அவர்களுக்கு தாக்கீது அனுப்பியுள்ளது அமலாக்கத் துறை தீர்ப்பாயம். இதற்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டிஸ் எம்.எஸ்.ரமேஷ், ஜஸ்டிஸ் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறியுள்ள அமலாக்கத் துறைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ், சட்டீஸ்கர் மாநில அதிகாரி அருண் திரிபாதி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறையால் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில், சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணையை மீறி, அவரைக் காவலில் வைத்திருந்ததைக் கண்டித்து, பணமோசடித் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று அமலாக்கத் துறையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டிஸ் அபய் எஸ். ஓகா, ஜஸ்டிஸ் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அமர்வு கண்டித்திருந்தது. (பிப்ரவரி 12, 2025) அந்த வழக்கு 2019-2023 வரை சட்டீஸ்கரில் ஆட்சியிலிருந்த பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசின் காலத்தில் ஊழல் நடந்ததாக, அதிகாரிகளை மய்யப்படுத்தி, அரசியல்வாதிகளை நோக்கி நகரும் வகையில் அமலாக்கத் துறையால் தொடுக்கப்பட்ட வழக்காகும். அதே வழக்கில் அரவிந்த் சிங் என்பவருக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை வைத்ததற்கும் உச்சநீதிமன்றம் அமலாக்கத் துறையைக் கண்டித்துள்ளது.

வழக்குரைஞர்களுக்கு அழைப்பாணைப் பிரச்சினையிலும் கண்டனம்!

வழக்குரைஞர்களுக்கு அழைப்பாணை அனுப்பியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றிலும், ஜூலை 21, 2025 அன்று விசாரித்த ஜஸ்டிஸ் வினோத் கே,சந்திரன், ஜஸ்டிஸ் என்.வி.அஞ்சாரியா அடங்கிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அமலாக்கத் துறை அனைத்து எல்லைகளையும் மீறுவதாகக் கண்டித்துள்ளது.

அரியானாவில் சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அரியானா காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் சுரேந்தர் பன்வாரை, உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்ததைச் சுட்டிக்காட்டி, அவரை விடுவித்து பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, உச்சநீதிமன்றம் சென்ற அமலாக்கத் துறையிடம், பன்வாரை மனிதத் தன்மையற்ற வகையில் 15 மணி நேரம் தொடர்ந்து விசாரணை செய்தது குறித்துக் கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம். மிகக் கடுமையாகவே, அமலாக்கத் துறையின் நடவடிக்கையை ‘அதிகார துஷ்பிரயோகம்’ என்றும், ’மனிதத் தன்மைக்கு விரோதமானது’ என்றும் கண்டித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, ஏ.ஜி.மாஷி ஆகியோர்.

ஒன்றிய அரசின்  ஆயுதமாக மாறிய அமலாக்கத்துறை… முற்றுப் புள்ளி எப்போது?- அடுக்குக்காக கேள்விக் கணைகளை தொடுத்த வீரமணி…

பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் வழக்குகள் 500 விழுக்காடு அதிகரிப்பு

2014-க்கு முன் இருந்ததை விட பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் 500% அதிகமாக பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி வழங்கிய தகவலின் படி, ஜூலை 2024 வரை மொத்தம் 7083 வழக்குகள் பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் தொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில் கடந்த 10 ஆண்டுகளில் 5297 வழக்குகள் என்றும் தெரிவித்தார். இவற்றுள் 132 வழக்குகள் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிரானது என்று அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

2020-இல் 28, 2021-இல் 26, 2022இல் அதிகபட்சமாக 34, 2023-இல் 26 வழக்குகள் எனப் பட்டியல் நீள்கிறது. இவற்றுள் 5 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன; அதில் 2020-இல் ஒரே ஒரு வழக்கில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் பட்டியலிட்டுள்ளார். எனில், பிற வழக்குகளின் நிலை என்ன? முடிந்த வழக்குகளில் வெறும் 20% மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றால், குற்றம் நிரூபிக்கப்படாத எஞ்சிய 80% வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை, பொய்க் குற்றச்சாட்டு அல்லது தவறான அடிப்படையில் தொடுக்கப்பட்டவை என்று தானே பொருள்.

பணமோசடி தொடர்பாக 2019 முதல் 2024 வரை தொடுக்கப்பட்டு விசாரணை முடிந்த வழக்குகளில் வெறும் 6.42% மட்டுமே குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்தில் 2024 டிசம்பரில் தெரிவிக்கப்பட்டது.  அமலாக்கத் துறை, ஒன்றிய அரசின் நிதித் துறையின் கீழ் செயல்படுகிறது. அந்தச் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன, அமலாக்கத் துறை எப்படி பயன்படுத்தப்படுகிறது? என்பதற்கு, தொடர்ந்து பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகள் குறித்துப் பதிவு செய்துள்ள கண்டனங்களும், கடுமையான எச்சரிக்கைகளுமே சான்று!ஒன்றிய அரசின்  ஆயுதமாக மாறிய அமலாக்கத்துறை… முற்றுப் புள்ளி எப்போது?- அடுக்குக்காக கேள்விக் கணைகளை தொடுத்த வீரமணி…நிதி அமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா?

உச்சநீதிமன்றத்தின் இத்தகைய கடும் கண்டனங்களுக் உள்ளாகியுள்ள அமலாக்கத் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள ஒன்றிய நிதி அமைச்சர், இந்த அதிகார அத்துமீறல்களுக்கும், வரம்பு மீறல்களுக்கும், அரசியல் நோக்கிலான வழக்குகளுக்கும் பொறுப்பேற்க வேண்டாமா?

அரசியல் காரணங்களுக்காக ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுவதை, நீதிமன்றங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனவே! கூண்டில் அடைக்கப்பட்ட கிளியைப் போல இருப்பதாக, டில்லி மேனாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிணை வழக்கில் சி.பி.அய். (CBI) யை விமர்சித்ததே உச்சநீதிமன்றம். உள்ளூரில்  பா.ஜ.க. பிரமுகருடன் இருந்த பிரச்சினை காரணமாக, பண மோசடியில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஒடுக்கப்பட்ட சமுதாய விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டுக்கு இலக்கானதும் இதே அமலாக்கத் துறை தானே!

எப்பொழுது முற்றுப்புள்ளி?

அரசியலைமைப்புச் சட்டத்தையும், ஒட்டுமொத்த நாட்டையும் காப்பதற்காக உருவாக்கப்பட்ட சிபி.அய், அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற அமைப்புகளை ஒன்றிய அரசு தன்னுடைய அரசியல் லாபங்களுக்காகவும், கட்சிகளை மிரட்டவும், தங்களின் கொள்கை எதிரிகளை இன்னலுக்கு உள்ளாக்கவும் பயன்படுத்துவதற்கு எப்போது முற்றுப் புள்ளி வைப்பது? ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டாமா? மக்கள் தங்கள் வாக்குரிமையின் மூலமாகத் தங்கள் விருப்பத்தைப் பிரதிபலித்து தேர்ந்தெடுத்த ஆட்சிகளைக் காப்பாற்ற வேண்டுமா? அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி, எல்லோரையும் மிரட்டி, அழித்து குறுக்கு வழியில் வரக்கூடிய பாசிசத்திற்கு தலைவணங்க வேண்டுமா? என்பதை மக்கள் தீவிரமாக யோசிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.

விளிம்புநிலை மக்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு இளக்காரமாகத் தெரிகிறதா ? – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

MUST READ