வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் மாநிலத்திற்கு செல்கிறபோது அம்மாநில மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பீகார் பயணம் தொடர்பாகவும், இது தொடர்பாக பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் உமபாதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- இன்றைக்கு நாட்டில் பின்தங்கிய மாநிலமாக பீகார் இருக்கிறது. ஒரு 40 வருடங்களுக்கு பின்னால் சென்றீர்கள் என்றால்? முரசொலி மாறன் ஏன் வேண்டும் திராவிட நாடு? என்கிற புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகம் அரசால் தடை செய்யப்பட்டது. அதற்கு பிறகு அந்த நூல் பதிப்பிக்கப்படவில்லை. அந்த நூலில் அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக தமிழர்கள் கொந்தளிப்பில் இருந்தார்கள்.
தமிழ்நாட்டின் வருமானத்தை வைத்து பீகாரில் இரும்பு ஆலைகள், உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டுவந்தனர். அந்த மாநிலத்திற்கு ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டன. இணையதளம் போன்ற அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத அந்த காலத்தில் முழுமையான தரவுகளுடன் முரசொலி மாறன் அதை எழுதியிருப்பார். மத்திய அரசு மாநில வாரிய ஒதுக்கிய நிதி விவரங்களை பார்த்தோம் என்றால் அப்போதும் பீகாருக்கு தான் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு இருக்கும்.
50 – 60 வருடங்களுக்கு பிறகு திரும்பிப் பார்த்தோம் என்றால் அவர்கள் வளர்ச்சி அடையவில்லை. அதேவேளையில் தமிழ்நாட்டில் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார்கள். குறிப்பாக கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதில் சிறப்பு கவனம் செலுத்தினார்கள். மத்திய அரசு போதிய நிதி வழங்கமாட்டார்கள் என்பதை தமிழக தலைவர்கள் உணர்ந்துகொண்டதால், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் அவர்கள் கவனம் செலுத்தினார்கள். அதன் காரணமாகவே தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்தது.
இன்றைக்கு நாம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருக்கிறோம். நாம் வழங்குகிற நிதியை வைத்துதான், பீகார், உத்தரபிரதேச மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதியை வழங்குகிறது. அதற்கு காரணம் மக்களை முட்டாளாக வைத்து இருந்தால் தான் அவர்கள் வாக்களிப்பார்கள் என்று அன்றைய காங்கிரஸ் கட்சியினரும் நினைத்தனர். கல்வி அறிவு வழங்கினால் அவர்கள் நம்மைவிட்டு போய் விடுவார்கள் என்று நினைத்தார்கள். அதேபோல் இன்றைக்கு காங்கிரசைவிட்டு விட்டு பாஜகவுக் சென்றுவிட்டனர். தற்போது பாஜகவினரும் அதே தவறுகளை தான் செய்கிறார்கள். அடுத்த ரவுண்டு பாஜகவையும் கைவிட்டு வேறு ஒருவரிடம் சென்று விடுவார்கள். படித்தல் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று இந்த நூற்றாண்டில் தான் தெரிகிறது.
வடமாநிலத்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருகிறார்கள். அதற்கு முன்னதாக வடமாநிலங்களுக்கும் தென் இந்தியாவுக்கும் எந்த வித தொடர்புகளும் இல்லாமல் இருந்தன. இன்றைக்கு வேலைவாய்ப்பை தேடி அவர்கள் தென் மநிலங்களுக்கு வரும்போது, அரசியல் கட்சிகள் தங்களை வளர விடாமல் வைத்திருப்பது தெரிகிறது. இந்த சூழலில் தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பீகாருக்கு அழைத்து உள்ளனர். ஸ்டாலின் அங்கு செல்கிறபோது, அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
ராகுல்காந்தியின் யாத்திரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பாஜகவினர் வாக்கு திருடர்கள் என்று மக்களிடம் வெளிப்படுத்துகின்றனர். அது எந்த அளவுக்கு வாக்குகளாக மாறும் என்று தெரியவில்லை. இந்நிலையில், ஸ்டாலின் வடமாநிலத்தவரை விமர்சித்து பேசியவற்றை, அண்ணாமலை இந்தி சப்டைட்டில் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதி மாறன் ஆகியோர் பேசியவற்றையும் வீடியோவில் வெளியிட்டுள்ளார். என்னை பொருத்தவரை அது நல்லதுதான். இரு மொழியை படித்ததால் தான் தமிழர்கள் வளர்ந்துள்ளனர். பீகார் மாநிலத்தவர் ஆங்கிலம் படிக்காததால் கீழ் நிலையில் உள்ளது அவர்களுக்கு தெரியவரும்.
இது திமுகவுக்கு நல்லதுதான். இதனை தேசிய ஊடகங்கள் விவதமாக்கியுள்ள நிலையில், பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். ஆங்கில ஊடங்கள் கோடி மீடியாக்கள் ஆகும். அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருப்பது அதற்காக தான். மத்திய அமைச்சர் எல். முருகன், முதலமைச்சரின் வருகை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவை ஏற்கதக்கது அல்ல, இவ்வாறு அவர் தெரிவித்தார்.