ராபிடோ புக் செய்து திட்டமிட்டு காதல் வலையில் விழ வைத்து மோசடி செய்த காதலியின் பேரில் காவல் நிலையத்தில் காதலன் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் விஜய் சங்கர் (37).பி.ஏ.பட்டதாரியான இவருக்கு வாய் புற்றுநோய் உள்ளது. ராபிட்டோவில் பைக் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அம்பத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ராபிடோ புக் செய்துள்ளார்.அம்பத்தூரில் இருந்து அவரை கொளத்தூரில் இறக்கிவிட புக் செய்துள்ளார்.அந்த பெண்ணை விஜய் இறக்கிய பின்பு அந்த பெண்ணின் செல்போனில் இருந்து விஜய் சங்கருக்கு போன் வந்துள்ளது. அந்த தொடர்பு வாட்ஸ் ஆப் மூலம் தொடர்ந்து நட்பாக பேசியுள்ளார். அதில் தனது பெயர் சஜிதா பர்வின் தங்களை காதலிப்பதாக தெரிவித்த அவர் எனக்கு ஏற்கனவே திருமணமாகி தற்சமயம் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்று அவர் அப்பா அம்மா அண்ணன் மற்றும் அவரது தம்பியுடன் ஒன்றாக வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

கணவனை விட்டு பிரிந்து வந்ததால் வீட்டில் கொடுமை செய்து வருவதா கூறியுள்ளார். இதல் முதல் திருமணத்தின் போது தனது குடும்பத்தினர் ரூ 5,00,000 பணம் செலவு செய்துள்ளனர். வெளியே கடன் கேட்டுள்ளேன் மூன்று மாதத்தில் பணம் வந்து விடும். பணம் வந்தவுடன் வீட்டில் கொடுத்து விட்டு நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதற்கு விஜய் சங்கர் தனக்கு வாய் புற்றுநோய் இருப்பதால் முதலில் மறுப்பு தெரிவித்துள்ளார். பிறகு சாஜிதா பர்வீன் உண்மையாகவே காதலிப்பதாகவும் நீ இல்லை என்றால் இறந்து விடுவேன். வாய்ப்புற்று நோய் இருந்தாலும் பரவாயில்லை சாஜிதா பர்வீனின் தூரத்து உறவினர் ஒருவர் கேரளாவில் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் அவரிடம் நான் பேசி விட்டேன்.
அவர் ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் நல்ல முறையில் அறுவை சிகிச்சை செய்து வைக்கிறேன் என்று எனக்கு உறுதியளித்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு கடைசி வரை ஒன்றாக சந்தோஷமாக வாழலாம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து திருமணம் செய்து கொள்வதாகவும் நம்பவைத்து காதலித்து நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனிடையே கடந்த 2024 ஆண்டு சாஜிதா பர்வின் அவருடைய உடன்பிறந்த அண்ணன் சாதிக் என்பவரை விஜய் சங்கரிடம் நேரில் அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்துள்ளாா்.
மேலும், திருமணத்திற்கு ரூபாய் 3,00,000 பணம் தேவைப்படுகிறது. வீட்டில் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறார்கள். அந்த பணத்தை கொடுத்து விட்டால் பிறகு நாம் இருவரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக கணவன் மனைவியாக வாழலாம். வெளியே கேட்ட கடன் ரூ 5,00,000 இன்னும் வரவில்லை, வந்தவுடன் திரும்ப கொடுத்த விடுகிறேன் என்றும் என்னிடம் உதவி கேட்டார்.
இதனை நம்பி வாய் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை விஜய் சங்கர் GOOGLE PAY APP மூலமாக சாஜிதா பர்வினுடைய GOOGLE PAY எண்களுக்கு ரூ 3,00,000 வரை பணம் அனுப்புள்ளார். மேலும் அதன் பிறகு அவருடைய மருத்துவ சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த பணத்தையும் சாஜிதா பரவின் பலமுறை பல காரணங்களை சொல்லி ஆசை வார்த்தைகள் கூறி சிறுக சிறுக ரொக்கமாகவும் GOOGLE PAY APP மூலமாகவும் மொத்தமாக ரூபாய் 3,80,000 வரை வாங்கியுள்ளார்.
ஒரு கட்டத்தில் வாய் புற்றுநோய் தீவிரமடைவே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பணத்தை கேட்டப்போது ஏதோ ஏதோ காரணம் தெரிவித்து காலம் தாழ்த்தி வந்த சாஜிதா நேரில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளாா். 2 மாதங்களுக்கு முன்பு சென்னை, அம்பத்தூர் சிங்கப்பூர் ஷாப்பிங் பின்புறம் உள்ள பூங்காவிற்கு விஜய் சங்கர் நேரில் சென்றுள்ளார்.
அங்கு சென்றவுடன் சாஜிதா பர்வீன் அவருடைய ஆண் நண்பர் பிரவீன் மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி காருக்குள் வைத்து சாஜிதா பர்வீன் மற்றும் அவரது மூன்று கூட்டாளிகளுக்கு நா கூசும் தகாத வார்த்தைகளால் திட்டி கண்மூடி தனமாக தாக்கியதோடு இனிமேல் பணம் கேட்டு வந்தால் உன்னையும் உன் அம்மாவையும் கொன்று தடம் தெரியாமல் புதைத்து விடுவோம் என்று பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் பாக்கெட்டில் இருந்த பணம் 3000 த்தை அடித்து காரில் இருந்து வெளியே தள்ளி போட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து விஜய் சங்கர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நம்ப வைத்து நம்பிக்கை மோசடி செய்த சஜிதா பர்வீன், அவரது அண்ணன் சாதிக்,நண்பர் பிரவீன் மீது 406,420 294(b),323,382,506(II) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
ஆனால் காவல் துறை கைது செய்ய முடியாத அளவிற்கு டிமிக்கு கொடுத்த வந்த சஜிதா பர்வீனை செல்போன் லொக்கேஷன் மூலம் கண்டு பிடித்து கைது செய்தனர். பின்னர் சஜிதா பர்வினை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டாா். அப்போது நீதிபதி பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சைக்காக 15 நாட்களுக்கு 1 லட்சம் தொகை செலுத்த வேண்டும் இல்லை என்றால் சிறை தண்டனை என கூறி ஜாமினில் அனுப்பி வைத்தார். சஜிதா பர்வீன் இதேபோல் பலரிடம் மோசடி செய்துள்ளதாகவும் பணம் படைத்தவர்கள் பலவீனமானவர்களை குறி வைத்து மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது. காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தை கூறி புற்றுநோய் பாதிக்கப்பட்டவரை இளம் பெண் ஏமாற்றி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


