spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைத.வெ.க தமாசு சொல்லவா...! ரகசியம் உடைக்கும் அய்யநாதன்!

த.வெ.க தமாசு சொல்லவா…! ரகசியம் உடைக்கும் அய்யநாதன்!

-

- Advertisement -

சீமான், விஜய் பின்னால் இருக்கும் தொண்டர்களை குறிவைக்கிறார். அவர்களை அரசியல்படுத்தினால் அவர்கள் தன் பின்னால் வருவார்கள் என்பதால் விஜய் மீது விமர்சனத்தை தீவிரப்படுத்தியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

விஜயின் திருச்சி மாநாடு குறித்தும், விஜய் மீதான சீமானின் விமர்சனங்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- திருச்சியில் விஜய் பிராச்சாரத்தின்போது பெருமளவில் கூட்டம் திரண்டது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் அது வடிகட்டிய பொய்யாகும். அந்த நிகழ்வுகளை நன்றாக கவனித்தால் தெரியும். விஜய்க்கு திருச்சியில் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கவில்லை. ஆனால் அவர் நடத்திவிட்டார். விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கு 3 ஆயிரம் பேர் வரை திரண்டிருந்தனர். அதனை நாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம்.

அவர் விமான நிலையத்தில் இருந்து மரக்கடைக்கு வேகமாக வந்திருக்கலாம். ஆனால் அவர் மெதுவாக வாகனத்தை நகர்த்தி வந்தார். விஜய் பேருந்துக்கு முன்பாக சென்ற காரை வேகமாக போக சொல்லிவிட்டு அவர் வாகனத்தை வேகமாக இயக்கி இருக்கலாம். ஆனால் விஜய் திட்டமிட்டே வாகனத்தை மெதுவாக இயக்கினர். இதனால் பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு செல்வதற்கு பல மணி நேரம் ஆகியது. உண்மையில் கூட்டம் இருந்தது மரக்கடை பகுதிதான். விஜயிடம் இருந்து அரசியலை எதிர்பார்க்கும் அளவிலான பேச்சு எப்போதும் இருந்தது கிடையாது.

விஜயினுடைய அரசியல் என்பது குற்றச்சாட்டு அரசியலாகும். அதில் புதுமை எதுவும் கிடையாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று அவர் சொல்லவே இல்லை. விஜயை பொருத்தவரை அனைத்தும் முன்பே திட்டமிடப்பட்டவைதான். 6 கிலோ மீட்டர் தொலைவை கடக்க 6 மணி நேரம் ஆனது என்று ஊடகங்கள் சிலாகிக்கின்றன. விஜய் என்பவர் மற்றொரு எம்ஜிஆர் என்பது தான் அவர்கள் காட்ட முயற்சிப்பது. விஜயினுடைய அரசியல் என்பது தற்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் திமுக, அதிமுகவுக்கு அச்சுறுத்தலாக இருக்கப்போவது இல்லை.

காரணம் இவை இரண்டும் நீண்ட கால கட்சிகள். இரு கட்சிகளும் ஆட்சியில் இருந்து நிரூபித்து விட்டனர். ஸ்டாலினோ, எடப்பாடியோ ஒரு வாக்குறுதி அளித்தார்கள் என்றால் அதை நிறைவேற்றுவார்களா? இல்லையா? என்று தெரியும். ஆனால் விஜய் சொன்னால் மக்கள் நம்புவார்களா? விஜய் 1977 தேர்தல். எம்ஜிஆர் என்று நினைக்கிறார். எம்ஜிஆருக்கு பின்னால் இருக்கும் அரசியல் பெரியது. எம்ஜிஆர் கூட இருந்த அரசியல்வாதிகள் ரொம்ப பெரியவர்கள்.

eps mkstalin

சீமான் ஏன் விஜயை எதிர்க்கிறார் என்றால் அவர் திராவிட கட்சிகள் மற்றும் காங்கிரசுக்கு எதிரானவர் ஆவார். அவருக்கு என்று தனியான வாக்கு வங்கி உள்ளது. விஜய் அரசியலுக்கு வந்த உடன் ஊடகத்தில் ஒரு பிரிவினர் சீமானுடைய நாதக வாக்குகள் முழுவதும் விஜயிடம் போய்விடும். சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகள் எல்லாம் விஜய்க்கு போய்விடும் என்கிறார்கள். இது விஜயுடன் இருக்கும் அரசியல் வியூக வகுப்பாளர் சொன்ன வார்த்தைகளாகும். என்னுடன் அவர் நடத்திய சந்திப்பில் தமிழ்நாட்டில் ஆட்சியை நிர்ணயிப்பவர்களே சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் என்று சொன்னார். அதையே தான் வெளியில் திட்டமிட்டு சொல்கிறார்கள்.

விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பிறகு நாதகவில் உள்ளவர்கள் எல்லாம் விஜயிடம் வந்துவிடுவார்கள் என்று கிளப்பிவிட்டனர். இதன் காரணமாக சீமான் விஜய்க்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். இளைஞர்கள் தற்போது விஜயினுடைய பேச்சை கேட்க போகிறார்கள். இதுவரை அவர்கள் ரசிகர்கள். யாருடையே பேச்சையோ கேட்காதவர்கள். செய்தி தொலைக்காட்சிகளை பார்க்காதவர்கள். இதற்கு மேல் விஜய். தவெக அரசியலை பார்க்க போகிறார்கள். அவர்கள் தான் சீமானின் இலக்கு. தற்போது சீமான், விஜயை டார்கெட் செய்கிறார். விஜய் செய்வது அரசியலா? நான் செய்வது அரசியலா? நீங்களே முடிவு எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு விஜய் மீதான சீமானின் விமர்சனம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. சீமான் தான் விஜயை குறிவைத்து பொளக்கப் போகிறார். அவருக்கு அங்குதான் லாபம் உள்ளது. விஜய் ரசிகர்களை அரசியல் படுத்தினால் அவர்கள் சீமானிடம் வந்துவிடுவார்கள். ஆனால் விஜயால் அவர்களை அரசியல் படுத்த முடியாது. விஜய் வெறும் குற்றச்சாட்டு அரசியலை தான் செய்வார். விஜய்க்கு திமுகவை எதிர்க்க வேண்டிய கட்டாயம் எதுவும் கிடையாது. ஆனால் அது அவருடைய அரசியல் வியூகம் அவ்வளவுதான். விஜய் செல்வது வியூக அரசியல். அது மக்கள் அரசியல் அல்ல. இது மக்களுக்கு புரிய தொடங்கிவிடும்.

விஜய் யாரிடம் பேசுகிறார். யாரை சேர்த்துக்கொள்கிறார் என்கிற இடத்தில் நான் முரண்பட்டேன். இவர் இப்படிதான் போக போகிறார் என்று தெரிந்துவிட்டது.  பழைய, புதிய எதிர்க்கட்சிகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எதிழுயுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது விஜயை தான். அதனால் என்ன ஆகிவிட போகிறது. விஜயை, திமுகவை அரசியல் எதிரி என்று தான் சொல்கிறார். அப்போது அவர்கள் திருப்பி சொல்ல மாட்டார்களா? தேர்தலுக்கு முன்பாக யார் நண்பன்? யார் எதிரி? என்று தெரியவந்துவிடும்.

தமிழ்நாட்டின் அரசியலின் ஆழம் இன்னும் விஜய்க்கு தெரியவில்லை. திமுக அரசினுடைய செயலின்மையோ, திறமையின்மையோ நீங்கள் சொல்லவில்லை. மாறாக அரசியல் எதிரி என்று சொல்கிறீர்கள். சீமான் அதைதான் திருப்பி கேட்கிறார் கொள்கை வேறு, அரசியல் வேறா என்று கேட்கிறார். திமுகவின் கொள்கையை ஏற்கிறீர்களா? திமுகவின் அரசியலை மட்டும் எதிர்க்கிறீர்களா? என்று கேட்கிறார்.

உங்களுடைய கொள்கை தலைவரை சீமான் அவதூறாக பேசியபோது நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. காரணம் உங்களுக்கு எழுதி கொடுப்பவர்தான், அவருக்கும் எழுதி கொடுக்கிறார். விஜய்க்கு அதீத வெளிச்சம் கிடைக்கிறது. அப்படி கிடைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. அதன் ஆபத்து உங்களுக்கு கிடைக்கும் வெளிச்சத்தை போல உங்களுடைய குறைகளுக்கும் வெளிச்சம் கிடைக்கும். விஜய் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ