டெல்லி சென்றடைந்த பழனிசாமி இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் சென்றனர்.
டெல்லி சென்றடைந்த பழனிசாமி, துணை ஜனாதிபதி மாளிகையில் இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கொங்கு மண்டலத்தை சார்ந்த தமிழர் ஓருவர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தமிழகம் பெருமை பெற்றுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா். இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமியுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, நாடாளுமன்ற கட்சித் தலைவர் மு. தம்பிதுரை, எம்.பிக்கள் சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை தொடர்ந்து இரவு 8 மணி அளவில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளாா்.
அது நியாயம் இல்ல….. கொடுக்கணும்னு அவசியமும் இல்ல…. ‘பராசக்தி’ டைட்டில் குறித்து விஜய் ஆண்டனி!
