spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுலசேகரபட்டினத்தில் கடல் அரிப்பு அச்சம்...உடனடி நடவடிக்கை கோரிக்கை

குலசேகரபட்டினத்தில் கடல் அரிப்பு அச்சம்…உடனடி நடவடிக்கை கோரிக்கை

-

- Advertisement -

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரபட்டினம் கடற்கரையில் கடல் அரிப்பு தீவிரமடைந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.குலசேகரபட்டினத்தில் கடல் அரிப்பு அச்சம்...உடனடி நடவடிக்கை கோரிக்கைதிருச்செந்தூர் அருகே கடற்கரை ஓரமாக குலசேகரபட்டினம் அமைந்துள்ளது. இந்த குலசேகரபட்டடினத்தில் அமைந்துள்ள முத்தாரமன் கோயில் மிகவும் பிரசத்திபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சி “சூரசம்காரம்” கடற்கரையில் நடைபெறுகிறது. அந்நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதால், இந்த கடற்கரை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சூரசம்காரம் நடைபெறும் பகுதியிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட பனைமரங்கள் கடல் அரிப்பால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. எனவே உடனடியாக கடல் அரிப்பு தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக அலுவலர்கள் தெடர்ந்து கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.

we-r-hiring

தொடர் கடல் அரிப்பால் கடற்கரையோர பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால், அதன் அருகே அமைக்கப்பட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட  உயர் மின் விளக்கு கம்பங்கள் கடலுக்குள் விழுந்துள்ளது. இதனால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இந்த கடற்கரையில் அமைந்துள்ள பூங்காவுக்கு வர அச்சப்படும் நிலை, ஏற்பட்டுள்ளது. தசரா காலங்களில் பக்தர்கள் பயன்படுத்தும் முக்கியச் சாலை ஆபத்தான நிலையில் உள்ளதால் கடல் முழுவதும் கலையிழந்து காணப்படுகிறது.

ஏற்கனவே திருச்செந்தூரில் ஏற்பட்ட கடல் அரிப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது குலசேகரபட்டினத்தில் கடல் அரிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், “கடல் அரிப்பைத் தடுக்கும் நிரந்தர நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்” என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

‘சக்தித் திருமகன்’ படத்தின் நடுவே விஜய் ஆண்டனி செய்த நெகழ்ச்சி செயல்!

MUST READ