spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதீண்டாமையை ஒழித்து, சமத்துவம், மனிதநேயத்தை நிலைநாட்டுவது நம் அனைவரின் கடமை - செல்வப்பெருந்தகை

தீண்டாமையை ஒழித்து, சமத்துவம், மனிதநேயத்தை நிலைநாட்டுவது நம் அனைவரின் கடமை – செல்வப்பெருந்தகை

-

- Advertisement -

‘தீண்டாமை கொடுமை என்பது மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்!’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.தீண்டாமையை ஒழித்து, சமத்துவம், மனிதநேயத்தை நிலைநாட்டுவது நம் அனைவரின் கடமை - செல்வப்பெருந்தகைமேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ஒன்றியத்தின் கொல்லாங்கரை கிராமத்தில் பல ஆண்டுகளாக விளிம்புநிலை மக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை, சாதி ஆதிக்கவாதிகள் தடைசெய்தவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். மேலும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களை அந்தப் பாதையில் செல்ல விடாமல் தடுத்திருப்பது கல்வி உரிமைக்கும், குழந்தைகள் உரிமைக்கும் அநீதி இழைக்கும் செயலாகும்.

சுதந்திரம் பெற்று 79 வருடம் ஆன நிலையிலும் இந்த வகையான சாதி வேறுபாட்டு அணுகுமுறைகள் சமூக ஒற்றுமைக்கும், ஜனநாயக மாண்பிற்கும் கேடு விளைவிக்கும். ஆகையால், இச்செயல்களை உடனடியாக தடுக்கவும், குற்றவாளிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன். சாதி வெறி, தீண்டாமை கொடுமை ஆகியவற்றை ஒழித்து, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தை நிலைநாட்டுவது நம் அனைவரின் கடமை” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.

தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய நடைமுறை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

we-r-hiring

MUST READ