spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகூட்டம் அளவை கடந்துவிட்டது தெரிந்தும் பிரச்சாரத்தை நிறுத்தாதது ஏன்? தவெகவிற்கு நீதிபதி சரமாரி கேள்வி?

கூட்டம் அளவை கடந்துவிட்டது தெரிந்தும் பிரச்சாரத்தை நிறுத்தாதது ஏன்? தவெகவிற்கு நீதிபதி சரமாரி கேள்வி?

-

- Advertisement -

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெரும் சோகத்தில் முடிந்தது.  இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.கூட்டம் அளவை கடந்துவிட்டது தெரிந்தும் பிரச்சாரத்தை நிறுத்தாதது ஏன்? தவெகவிற்கு நீதிபதி சரமாரி கேள்வி?

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் த.வெ.க தலைவர் விஜய்யை பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிகழ்ச்சியில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தரப்பு மற்றும் காவல்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதன் போது, நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பி இரு தரப்பையும் கண்டித்தார்.

we-r-hiring

தவெக தரப்பு வாதம்,

  • கரூரில் உள்ள லைட் ஹவுஸ் பகுதியில் போலீஸ் அனுமதி வழங்கவில்லை எனவும்,
  • சம்பள நாள் என்பதால் அதிக மக்கள் வரமாட்டார்கள் என்று கணித்ததாகவும் தெரிவித்தனர்.
  • இவ்வளவு கூட்டம் வரும் என்று எங்களே எதிர்பார்க்கவில்லை” எனவும் கூறினர்.
  • கரூரில் சாலை நடுவே உள்ள செண்டர் மீடியனை எடுத்து கொடுத்திருந்தால் பிரச்சாரத்திற்கு சுலபமாக இருந்திருக்கும் என்று தெரிவித்த அவர்கள், கட்சியினரை கட்டுப்படுத்த முடியும் ஆனால் பொதுமக்களை தடுக்க வேண்டியது போலீஸின் பொறுப்பு எனவும் வாதிட்டனர்.
  • மக்கள் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதால் தான் விஜய் வெளியே வராமல் இருந்தார் என்று விளக்கம் அளித்தனர்.

காவல்துறை வாதம்,

  • விஜய் பிரச்சாரம் நடந்த இடத்தில் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.
  • லைட் ஹவுஸ் பகுதியில் அமராவதி ஆற்றுப் பாலம் இருப்பதால் அனுமதி மறுக்கப்படதாக தெரிவித்தனர்.
  • விஜய் பிரச்சாரம் நடந்த அதே இடத்தில் இதற்கு முன் நடைபெற்ற அதிமுக பிரச்சாரத்தின் போது அதிக வாகன நெரிசல் ஏற்பட்டதை குறிப்பிட்டனர்.
  • புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி முனியப்பன் கோயில் சந்திப்பில் தாமதம் செய்தனர்.
  • போலீசார் அறிவுறுத்தலையும் மீறி விஜய் ராங் ரூட்டில் சென்றார்.
  • கரூர் பாலத்தில் இருந்து வேண்டுமென்றே தாமதமாக வந்தனர்.
  • குறிப்பாக முனியப்பன் கோயில் சந்திப்பில் விஜய் கேரவனுக்குள் சென்று விட்டார்.
  • விஜய்யை அங்கு பார்த்திருந்தால் கூட்டம் கலைந்திருக்கும்.
  • விஜய் வாகனம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன் அங்கேயே நிறுத்தும்படி அறிவுருதினோம் என்றி கரூர் டிஎஸ்பி வாக்குமூலம் அளித்தார். ஆனால் விஜய் வாகனம் இன்னும் முன்னே செல்ல வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
  • தவெகவினர் நேர அட்டவணையை பின்பற்றவில்லை. விஜய் சொன்ன நேரத்திற்கு வராததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஜய் சொன்னபடி 3 மணிக்கே வந்திருந்தால் விபத்து நிகழ்ந்திருக்காது என்றும் வாதிட்டனர்.
  • அதுமட்டுமின்றி மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரும் வாகனத்தை செல்லவிடாமல் தாமதப்படுத்தியது தான் நெரிசலுக்கு முக்கிய காரணம் எனவும் காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
  • அனுமதி பெறும் போது வேலுசாமிபுரம் இடம் திருப்தியாக உள்ளது என்று புஸ்ஸி ஆனந்த் கூறினார். அப்போதே வேண்டாம் என்று சொல்லியிருக்களாமே. என காவல்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
  • மேலும்,நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையில் உண்மை வெளிவரும் எனவும் தெரிவித்தனர்.

நீதிபதியின் கேள்விகள்,

  • மைதானம் போன்ற பெரிய இடம் ஏன் கேட்கப்படவில்லை?”
  • “முன்னதாக கேட்ட இடங்கள் போதுமானவை அல்ல என்பது தெரியவில்லையா?”
  • “விஜய்யை பார்க்க 10,000 பேர் தான் வருவார்கள் என்று எந்த அடிப்படையில் கணித்தீர்கள்?”
  • வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நாட்களில் மக்கள் குறைவாக வருவார்கள் என எப்படிக் கூற முடியும்?”
  • “குழந்தைகளும் அதிகமாக வருவார்கள் என்பது தெளிவாக இருந்தும் ஏன் பெரிய இடம் கோரவில்லை?”
  • “எடப்பாடி பழனிசாமியைப் பார்க்க வருவது கட்சிக் கூட்டம். ஆனால் விஜய்யை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள் என்பதை கணிக்காதது ஏன்?”
  • “கூட்டம் அளவை கடந்துவிட்டது தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை?” என நீதிபதி பரத்குமார், தவெக நிர்வாகத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். உண்மை வெளிவரும் வரை விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும், நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விஜயை விமர்சித்த பிரபல நடிகை…. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்…. அசராமல் நடிகை செய்த செயல்!

MUST READ