கரூர் துய சம்பவத்தில் விஜய், ராகுல்காந்தியிடம் பேசி புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரின் கைது நடவடிக்கையை தாமதப்படுத்தி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கரூர் துயர சம்பவத்தில் சிறப்பு விசாரணைக் குழுவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் துயர சம்பவத்தின் மூலமாக விஜய்க்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதை அவர் கண்டிப்பாக அரசியல் செய்ய பயன்படுத்துவார். விஜய் ராகுல்காந்தியிடம், தன் மீது வழக்கு வராமல் இருக்க பேசுகிறார். ராகுல்காந்தி, திமுகவை தொடர்பு கொள்கிறார். அதற்கு பிறகு மீண்டும் ராகுல்காந்தியை தொடர்புகொண்டு பேசிய விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தன்னுடைய சகாக்களின் மீதான கைது நடடிக்கையையும் தாமதப்படுத்தினார்.
ஆதவ் அர்ஜுனா மீது உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உத்தரகாண்டில் முதல்வர் பங்கேற்க இருந்த பேஸ்கட் பால் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆதவ் அர்ஜுனா சென்றார். அப்போது உத்தரகாண்ட் முதல்வர் பங்கேற்க வேண்டாம் என எச்சரித்ததால் நிகழ்ச்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா திரும்பிவிட்டார். அவர் சென்னை திரும்புகிறார். வீட்டிற்கு செல்கிறார். ஆனால் ஆதவ் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த வாய்ப்புகளை எல்லாம் விஜய் பயன்படுத்திக் கொள்கிறார்.
எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் விமர்சிப்பது போன்று முழுக்க முழுக்க விஜய்க்கு ஆதரவாக பேசுகிறார். பாஜக முழுமையாக விஜயை ஆதரிக்கிறது. அண்ணாமலை விஜய்க்கு வக்கீலாகவே மாறுகிறார். பாஜக எம்.பிக்கள் குழு, தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் வருகிறார்கள். ஆகவே இந்த வாய்ப்பை விஜய் பயன்படுத்தி, கூட்டணியை மாற்றுவதா? தனக்கான மார்க்கெட் என எல்லாவற்றையும் முடிவு செய்கிறார். இவை எல்லாமே ஒரு மித். ஒரு புரியாத தன்மை அவர் பக்கத்தில் உள்ளது. உண்மையை சொல்வதென்றால், ஜெயலலிதாவுக்கு கூட இவ்வளவு பெரிய பிம்பம் இல்லை. அவர் இந்த மாதிரி எல்லாம் எதிர்வினை ஆற்றியது இல்லை. துயர நிகழ்வுகளுக்கு ஓடிப்போவார்கள். வருத்தப்படுவார்கள். இந்த அளவுக்கு இறக்கம் அற்ற நிலையில் ஜெயலலிதா இருந்ததில்லை.
அவரை விட மிகவும் மோசமானவர் விஜய். ஜெயலலிதாவிடம் சென்று 4 நாட்கள் கையை கட்டிக்கொண்டு நின்றவர்தான் விஜய். கலைஞர், ஸ்டாலின், உதயநிதி என்று எல்லோரையும் புகழ்ந்து பேசியவர். எஸ்.ஏ.சந்திரசேகர் என்கிற கமர்ஷியல் ப்ராடக்ட் உருவாக்கிய, ஒரு கமர்ஷியல் ப்ராடக்ட் தான் விஜய். இதற்கு ஒரு பெரிய மித் எல்லாம் கிடையாது. ஆனால் இன்றைக்கு இருக்கிற மித், ஜெயலலிதாவை விட அதிகமான மித்.
ஜெயலலிதா கூட பயப்படுவார். யோசிப்பார். அதற்கு காரணம் ஜெயலலிதாவின் வழிகாட்டியான எம்ஜிஆர் மிகச்சிறந்த மனிதாபிமானியாக இருந்தவர். அதனால் ஜெயலலிதாவுக்கு அந்த பயம் இருந்தது. விஜய், தொண்டர்கள் இறந்தாலும், அடிப்பாட்டாலும் தனக்கு கவலையே இல்லை என்று இருக்கிறார். கரூர் சம்பவத்தை பயன்படுத்தி விஜய், பாஜக உடன் பேசுகிறார். முதலில் அவர் வழக்கறிஞர்களை சந்தித்து சிபிஐ விசாரணைக்கு தான் தயாராகினார். மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி தண்டபாணியிடம் தவெக வழக்கறிஞர் அறிவழகன் தான் சிபிஐ விசாரணை கோரி முறையிட்டார். கடையில் அவருடைய மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை.
ராமன் என்கிற பாஜக வழக்கறிஞரின் மனு மீது தான் நீதிபதி தண்டபாணி உத்தரவிடுகிறார். அதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு போகவில்லை. இவர்கள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின் கோரி தான் உச்ச நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். அஜித் மரணம் திமுகவுக்கு எதிரான ஒன்று அதனால் விஜய் சென்றார். ஆனால் கரூரில் உங்கள் தொண்டன் இறந்தால் ஏன் போக மறுக்கிறீர்கள்? இதெல்லாம் வியூக அமைப்பாளர் ஜான் ஆரோக்கியம் சொல்வது. அவர் சொல்லிக்கொடுத்து இவர் உள்ளே போய் உட்கார்ந்துகொண்டு சிஎம் சார் என்னை வேண்டும் என்றால் தொடுங்கள். என் தொண்டர்களை தொடாதீர்கள் என்கிறார்.
சிறப்பு விசாரணைக்குழு அதிகாரி அஸ்ரா கார்க், எதற்காக சமரசம் செய்து கொள்ளக்கூடிய அதிகாரி அல்ல. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு காரணம் விஜய் என்பதற்கான ஆதாரங்களை தான் அவர் சேகரித்துக்கொண்டிருக்கிறார். அப்படி அவர் சேகரித்துவிட்டார் என்றால் விஜய் எந்த வகையில் விபத்திற்கு காரணம்? அவருக்கு சென்ற அழைப்பு விவரங்கள். அந்த அழைப்புகளின் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எடுத்துவிடுவார். விஜய் கூட்டத்திற்கு தாமதமாக வந்ததற்கான காரணத்தையும் அவர் எடுத்துவிடுவார். ஆனால் அரசு அவரை விசாரணைக்கு அழைக்க அனுமதிப்பார்களா? அது உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு விசாரணைக்குழு. இதில் அரசு தலையிடாமல் இருந்தால் அஸ்ரா கார்க், விஜயை தூக்கிவிடுவார்.
அஸ்ரா கார்க், அருணா ஜெகதீசன் போன்றவர்கள் கரூர் சம்பவத்தில் குறைந்தபட்சம் என்ன நடந்தது? என்று விஜயிடம் விசாரிக்க வேண்டும். அருணா ஜெகதீசன் விசாரணைக்கு வந்து இத்தனை நாட்கள் ஆகியும் ஏன் விஜயிடம் செல்லவில்லை. அஸ்ரா கார்க் தற்போது தான் பொறுப்பேற்று கொண்டிருக்கிறார். ஆனால் இத்தனை நாட்களாக ஏன் புஸ்ஸியை பிடிக்கவில்லை? மக்கள் உயிரை பறித்தவர்களுக்கு சட்டமே கிடையாதா? இந்த நாடு ஜெயலலிதா, கலைஞர், ஸ்டாலின் போன்றவர்கள் எல்லாம் சிறைக்கு சென்றதை பார்த்திருக்கிறது. ஆனால், விஜய் மட்டும் அரசியலுக்கு வந்து விசாரணைக்கு உள்ளாகாமல் இருப்பது, ஒரு மிகப்பெரிய மித் ஆகும். அப்படி எல்லாம் மக்கள் ஆதரவு விஜய்க்கு இல்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறீர்கள். அப்போது நீங்கள் பயப்படுகிறீர்கள். விஜயை பார்த்து பயப்படுவது எந்த வகையில் பகுத்தறிவு?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.