கரூர் பிரச்சாரத்தில் பலர் இறந்த அன்று நடிகர் விஜய் கரூரில் தங்கி இருக்க வேண்டும். அவர் அன்று அங்கு தங்காததுதான் தவறு என எச்.ராஜா தெரிவித்துள்ளாா்.விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கும்பகோணம் அருகே சுவாமி மலையில் இன்று வேல் வழிபாடு நடைபெற்றது. அதில் பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் பேசியதாவது, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிர் இழந்த போது நடிகர் விஜய் கரூரில் தங்காதது அவர் செய்த தவறு. அவர் அன்று அங்கு தங்கி இருக்க வேண்டும். விஜய் அங்கு தங்காததால் முதல்வர் ஸ்டாலின் கரூர் சென்றார் என.ராஜா தெரிவித்துள்ளாா்.
விஜய்க்கு ஆதரவாக பாஜக குரல் கொடுப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளாரே? என செய்தியாளர்களின் கேள்விக்கு, ” திருமாவளவன் பேச்சுக்கெல்லாம் என்னிடம் கேள்வி கேட்கலாமா? திருமாவளவன் என்றதும் நினைவிற்கு வருவது சரக்கு, மிடுக்கு, பேச்சு,வேறொன்றும் இல்லை என விமர்சித்துள்ளாா்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முடக்குவதாக எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளாா். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை கூட நிறுத்தி உள்ளனர் என சாடியுள்ளாா்.
அடுத்த ஆண்டு 2026-ல் நடைபெறும் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும் என்றும்,அப்போது அவர்களுக்கும் இதே நிலை தான் ஏற்படும் என எச். ராஜா தெரிவித்துள்ளாா்.
விஜய் வீட்டில் நடக்கும் கூத்து! புட்டு புட்டு வைக்கும் ஜெகதீஸ்வரன்!