spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதவெக சொன்ன பொய்! விஜய்க்கு எதிராக சிக்கிய ஆவணம்! வில்சன் அம்பலப்படுத்திய 6 பாய்ண்ட்ஸ்!

தவெக சொன்ன பொய்! விஜய்க்கு எதிராக சிக்கிய ஆவணம்! வில்சன் அம்பலப்படுத்திய 6 பாய்ண்ட்ஸ்!

-

- Advertisement -

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆதாரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்கிறபோது தவெக ஒன்றுமில்லாமல் அடிபட்டு போய்விடும் என்று பத்திரிகையாளர் சத்தியராஜ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் துயர சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற காரசார விவாதங்கள் குறித்து பத்திரிகையாளர் சத்தியராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 2 விதமாக அமைந்திருந்தது. முதலாவது சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப் பட்ட சிறப்பு விசாரணைக்குழுவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு. ஆதவ் அர்ஜுனா மற்றும் கரூர் சம்பவத்தில் இறந்துபோன ரித்விக் என்பவரின் தந்தை தொடர்ந்துள்ள வழக்குகள் எஸ்.ஐ.டி. அமைக்கப்பட்டதற்கு எதிரானவை ஆகும். மற்றொரு வழக்கு சகோதரியை இழந்த ஒருவர் தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில் என்.டி.எஸ். நாயுடு என்கிற வழக்கறிஞர் ஆஜராகி வாதாடுகிறார். இந்த மனுவை பார்க்கிறபோது உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொய்களை அடுக்கி சொல்லியுள்ளனர். அவருடைய மனுவில் 3.15 மணிக்கே கரூரில் ஏதோ கெட்ட சம்பவம் நடக்கப் போகிறது என்று தெரிந்துவிட்டது. அதை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார் என்று மனுவில் தெரிவித்துள்ளார். மூத்த நீதிபதிகள் என்.வி. அஞ்சாரியா, மகேஸ்வரி முன்பாக ஆஜரான உடனே அவர்கள் பொய்யை தான் சொல்கிறார்கள்.

இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு! உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு

மற்றொன்று சமூக விரோதிகள் உள்ளே வந்ததால்தான் போலீசார் தடியடி நடத்தியதாக சொல்கிறார்கள். ஆனால் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. விஜய் வாகனம் உள்ளே நுழைவதற்கு இடையூறாக இருப்பவர்களை தான் போலீசார் தடியடி நடத்துகிறார்கள். அதுவும் ஆதவ் அர்ஜுனா வாகனத்தை 50 மீட்டருக்கு முன்னதாக நிறுத்த மறுத்ததால் தான் போலீசார் கூட்டத்திற்குள் செல்ல வழி ஏற்படுத்தினார்கள். இதற்கு ஆதராமாக விஜய் பேருந்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை பார்த்தாலே தெரிந்துவிடும். மற்றொரு முக்கியமான விஷயம் கூட்டத்திற்குள் ஆம்புலன்சை செந்தில்பாலாஜி தான் விட்டார் என்று சொன்னார்கள். அடுத்தபடியாக 30 பேரின் உடல்களை உடனடியாக போஸ்ட் மார்ட்டம் செய்து, அதிகாலை 4 மணிக்குள் தகனம் செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அப்படி 4 மணிக்கு உடல்கள் எரிக்கப்படவில்லை.  மறுநாள் காலையில் துணை முதல்வர் வந்து மரியாதை செலுத்தும் வரை உடல்கள் இருந்தன. அதன் பின்னர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள்தான் தகனம் செய்தனர்.

கரூர் விவகாரம்: தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு மீது நம்பிக்கையில்லை" - த.வெ.க.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், விபத்து நடைபெற்ற உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளரிடம் பேசினார். தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர், அந்த பகுதியின் ஐ.ஜியிடம் பேசினார். உடனடியாக அங்கே 220 பேர் கொண்ட மருத்துவ சிறப்புக்குழு வரவழைக்கப்பட்டது என்று மிகவும் தெளிவாக சொல்லிவிட்டார். மருத்துவர்கள் வரவில்லை என்றால்? போதிய மருத்துவர்கள் இல்லை என்று சொல்வார்கள். மருத்துவர்கள் வந்தால் சதிக்கோட்பாடு என்று சொல்கிறார்கள். சமூக வலைதளங்களில் என்ன என்ன பொய்களை சொன்னார்களோ அவற்றை வாதங்களாக முன்வைத்தார்கள். இந்த பொய்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. விஜய் கட்சியின் மீது ஏன் இவ்வளவு கோபப்படுகிறோம் என்றால்? 41 பேர் உயிரிழப்புக்கு நீங்கள் தார்மீக பொறுப்பேற்கவில்லை. முழுக்க முழுக்க சமூக வலைதளங்களில் பொய்யும், வதந்திகளையும் பரப்பியுள்ளனர். இவற்றை எல்லாம் தாண்டி உச்சநீதிமன்ற விசாரணையின்போதும் பொய்களை சொல்லி இருக்கிறீர்கள்.

ரித்விக் என்கிற சிறுவன் தரப்பில்  அவருடை தந்தை பன்னீர்செல்வம் தொடர்ந்த மனுவில் வழக்கறிஞர் என்.எஸ்.நாயுடு ஆஜராகி வாதாடினார். கிட்டதட்ட 8 வருடங்களுக்கு முன்பாக மனைவி, மகனை விட்டுவிட்டு ஓடிப் போனவர் பன்னீர்செல்வம். தற்போது ரித்விக் மரணத்திற்காக கொடுக்கப்படும் பணத்தை வாங்குவதற்காக விஜய் கட்சியினரால் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்ட போலியான நபர். இந்த அவதூறுகளுக்கு தமிழக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறபோது உரிய பதில் அளித்துவிடுவார்கள். பன்னீர்செல்வம், தனது மனுவில் தான் வழக்கு தொடர்வதற்கு முன்பாக வேறு ஒருவர் வழக்கு தொடர்ந்ததால் தான் விசாரணை சிபிஐக்கு போகாமல் போய்விட்டது.  எனவே எஸ்.ஐ.டி விசாரணையை ஏற்றுக்கொள்ளக்கூடாது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சொல்கிறார். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்ற விசாரணையில் சிபிஐ விசாரணை தேவை இல்லை. மாநில காவல்துறையே இந்த வழக்கை விசாரிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆதவ் அர்ஜுனா தரப்பில், நீதிபதி செந்தில்குமார் எஸ்.ஐ.டி அமைக்கும் முன்பாக தன்னுடைய கட்சியின் தலைவர் குறித்தும், கட்சியை குறித்தும் தவறாக பேசிவிட்டார் என்று சொல்கிறார்.

கரூர் காவல்துறை சொன்னதால்தான் விஜய் புறப்பட்டு சென்றார். ஆனால் அடுத்த நாள் ஏன் புஸ்ஸி ஆனந்த் செல்லவில்லை. ஏன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் செல்ல வில்லை. இங்கு விஜய் ஓடிப்போனார் என்பது பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த கட்சியும் ஓடிப்போய்விட்டது. அதைதான் நீதிபதி செந்தில்குமார் சொன்னார். ஒட்டுமொத்தத்தில் தவெக தரப்பில் நீதிமன்றத்தில் பச்சையாக பொய் சொல்லி இருக்கிறார்கள். அந்த பொய்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அம்பலப்பட போகிறது. உச்சநீதிமன்ற தரப்பில் இருந்து சிக்கலான சில கொக்கிகள் போடப்பட்டிருக்கிறது. விஜய் தரப்பு குறித்து ஏன் கேட்கவில்லை என்று நீதிமன்றம் கேட்டுள்ளது. அவர்களிடமும் கேட்டுவிட்டு முடிவை எடுத்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். ஒரு நீதிபதி எஸ்.ஐ.டி அமைத்துள்ளதற்கு அதிகாரம் உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரை நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி சொன்ன பிறகும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். மாநில அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லாவிட்டால் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு போக முடியும். ஆனால் விசாரணை தொடங்குகிற போதே நம்பிக்கை இல்லை என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்கி, நீதிமன்றத்தில் குறிப்பிட்டு சொல்கிறபோது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் விசாரணையில் குளறுபடிகள் இருந்தால் மட்டும்தான் சிபிஐ-ஐ அணுக முடியும் என்று சொல்கிறார்.

நாடாளுமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக போர்க்கொடி- எதிர்கட்சிகள் திட்டம்

கருர் சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரித்து வருகிறது. முதலமைச்சர் உத்தரவின் பேரில் அடுத்த நாளே அவர் விசாரணைக்கு செல்கிறார். இப்படி அடுத்த நாளே ஏன் விசாரணை செய்கிறார் என்று சதிக் கோட்பாட்டை உருவாக்குகிறார்கள். இன்றைக்கு நடக்கிற பிரச்சாரம் என்ன என்றால்? ஏதோ உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தோற்றே போய்விட்டது. அவர்களால் எந்த வாதத்தையும் முன்வைக்க முடியவில்லை என்று காட்டுகிறார்கள். இன்றைக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது இரு தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் நீதிமன்றம் கேட்டுள்ளது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது. தற்போதுதான் அவர்கள் மாட்டுவார்கள். காரணம் அவர்களுக்கு திமுகவின் சட்டத்துறை பற்றி தெரியவில்லை. இன்றைக்கு திமுக சட்டத்துறை தங்களிடம் ஆதாரம் இருக்கிறதே என்று எதார்த்தமாக சென்றிருப்பார்கள். காரணம் தவெக தரப்பில் இப்படி பொய்களை பேசுவார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  தற்போது ஆவணங்களை எல்லாம் அரசுத் தரப்பில் தயார் செய்து வைத்திருப்பார்கள். அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறபோது, தவெக தரப்பில் வசமாக மாட்டி ஒன்றுமில்லாமல் அடிபடுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ