செங்குன்றம் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான 320 கிலோ கஞ்சா பறிமுதல். லாரி ஓட்டுநர் உட்பட இருவரை கைது செய்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை.ஒடிசா, ஆந்திர மாநிலங்களில் இருந்து சென்னை வழியே தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு பதிவெண் கொண்ட சரக்கு வாகனம் ஒன்றை மடக்கி சோதனை நடத்தினர். ஓட்டுநர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்ததால் வாகனத்தை தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சரக்குகளை ஏற்றும் பகுதியில் ரகசிய அறை அமைக்கப்பட்டு பண்டல் பண்டலாக கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. 150 பண்டல்களில் கடத்திவரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான 320 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்த சரக்கு வாகன ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா கடத்தலுக்காக போலி வாகன பதிவெண் போலி பாஸ்ட்டேக் உள்ளிட்டவை பொருத்தப்பட்டு கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சரக்கு வாகன ஓட்டுநர் உட்பட இருவரை கைது செய்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், கஞ்சா கடத்தலில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசில் பறக்கப்போகுது… சிம்புவின் ‘அரசன்’ பட ப்ரோமோ குறித்த முக்கிய அப்டேட்!