கடலூரில் பெய்த கனமழையால் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று கடலூரில் கனமழை பெய்தது. இந்த கனமழையானது கிட்டத்தட்ட 17 சென்டிமீட்டர் அளவுக்கு பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த மேம்பாலம் கட்டும் பணி முற்றிலுமாக முடங்கியுள்ளது. மேம்பாலம் கட்டுவதற்காக பயன்படுத்தப்படும் தளவாடப் பொருட்கள் அனைத்துமே நீரில் மூழ்கியுள்ளது.
இந்த பணி ஏற்கனவே மந்தமாக நடந்த நிலையில், மழையால் மேலும் பாலம் கட்டும் பணி முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் பாலம் விரைவாக முடிக்க முடியுமா என்பது கேள்வி குறியாகியுள்ளது. இந்த தளவாட பொருட்களை மீட்கும் பணியை துரிதமாக ஊழியர்கள் மேற்க்கொண்டு வருகின்றனர். கடலூரைப் பொறுத்தவரை தாழ்வான இடங்களில் தண்ணீர் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மழை விட்டு உள்ளதால் மழை நீர் என்பது சீக்கிரமாக வடிந்துவிட எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ரெட் அலெர்ட்..! 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்..!!



