spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகளை கூட அதிகாரிகள் படிக்க மாட்டார்களா? நீதிபதிகள் கேள்வி

ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகளை கூட அதிகாரிகள் படிக்க மாட்டார்களா? நீதிபதிகள் கேள்வி

-

- Advertisement -

தெரு நாய்கள் விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மாநில தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகளை கூட அதிகாரிகள் படிக்க மாட்டார்களா? நீதிபதிகள் கேள்வி

தலைநகர் டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு தெரு நாய்கள் தாக்குதலால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் ஆகஸ்ட் 11ம் தேதி டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் பிடிக்க வேண்டும் ,அவற்றை காப்பகங்களுக்கு அழைத்துச் செல்வதோடு இதனை விலங்கு நல ஆர்வலர்கள் தடுக்க முற்பட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் என உத்தரவிட்டனர்.

we-r-hiring

இந்த உத்தரவை மாற்றி அமைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் விலங்கு நல ஆர்வலர்கள் சிலர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மனுக்கள் மீது கடந்த ஆகஸ்ட் 22 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவுகளை வழங்கியது. மேலும் இந்த வழக்கில் தெரு நாய்கள் விவகாரத்தை எவ்வாறு கையாளுவது? இதற்கென எத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது? என்பது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணை இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஏற்கனவே இரண்டு மாத கால அவகாசம் வழங்கி இருந்தோம்! ஆனால் தெலுங்கானா, மேற்குவங்க மற்றும் டெல்லி (மாநகராட்சி) உள்ளிட்ட மூன்று மாநிலங்கள் மட்டுமே இந்த வழக்கில் பிரமாண பத்திரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. குறிப்பிட்ட 3 மாநிலங்களை தவிர பிற மாநிலங்கள் ஏன் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்யாத அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் தெரு நாய் கடி என்பது தொடர்ந்து நடக்கும் நிகழ்வாக இருந்து வரும் சூழலில் நம் நாட்டின் நிலைமையை உலக நாடுகளுக்கு இந்த தெரு நாய் கடி சம்பவங்கள் எடுத்துரைத்து வருகிறது. நீதிபதிகளாகிய நாங்களும் இது சம்பந்தமான செய்திகளை படித்து வருகிறோம் என வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து நவம்பர் 3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் தலைமை செயலாளர்கள் அன்றைய தினம் ஏன்? எதற்காக? பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என விளக்கம் அளிக்க வேண்டும் என்றதோடு, அன்றைய தினமும் விளக்கம் அளிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

ஒரு தீவிரமான விஷயத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது மாநில அரசுகளுக்கு தெரியாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, சில மாநில அரசுகள் தங்களுக்கு நோட்டீஸ் கிடைக்கவில்லை என கூறுகிறார்கள்! ஆனால் அனைத்து மாநிலத்திற்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து இருக்கிறது. அதேவேளையில் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து பத்திரிக்கை, தொலைக்காட்சிமற்றும் சமூக ஊடகங்கள் அனைத்திலும் செய்தியாகவும் வெளிவந்துள்ள சூழலில் இதை கூட அதிகாரிகள் படிக்க மாட்டார்களா? என அடுத்தடுத்து கேள்வி வழக்கை ஒத்திவைத்தனர்.

சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்!! இது திமுக அரசின் புதிய சாதனை – அன்புமணி காட்டம்

MUST READ