தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொண்டரணியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது!


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 28 அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொண்டரிணிக்கான பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது!
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 28 சார்பு அணிகள் உருவாக்கப்பட உள்ளதாக கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தொண்டரணி அறிவிப்பாக மட்டுமே இருந்து வந்த நிலையில், அந்த அணிக்கு நிர்வாகிகள் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில் கரூர் நிகழ்விற்குப் பிறகு தொண்டரணிக்கு நிர்வாகிகளை நியமிக்கவும், தொண்டர் அணியை பலப்படுத்தி பணிகளை தீவிர படுத்தவும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பாக தொண்டர் அணிக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் ஓரிரு நாட்களில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான நிர்வாகிகள் தமிழக முழுவதும் இருக்கக்கூடிய கட்சி நிர்வாகிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கும், பொது மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், கூட்ட அசம்பாவிதங்களின் பொழுது களத்தில் இறங்கி பணியாற்றுவதற்கும் தொண்டர் அணியை வலுப்படுத்துவதற்காக தவெக திட்டமிட்டுள்ளது.
விஜயின் செயலால்தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது – அமைச்சர் எ.வ. வேலு


