spot_imgspot_img
Homeசெய்திகள்ஆன்மீகம்திருவிளக்கு பூஜைக்கு ரூபாய் நூறு கேட்ட செயல் அலுவலர்… தர்ணாவில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு…

திருவிளக்கு பூஜைக்கு ரூபாய் நூறு கேட்ட செயல் அலுவலர்… தர்ணாவில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு…

-

- Advertisement -

திருவெண்ணெய் நல்லூரில் திருவிளக்கு பூஜை நடத்துவதற்கு செயல் அலுவலர் நபர் ஒருவருக்கு நூறு ரூபாய் கேட்பதாக கூறி பொதுமக்கள் கோவிலின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவிளக்கு பூஜைக்கு ரூபாய் நூறு கேட்ட செயல் அலுவலர்… தர்ணாவில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு…விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் இன்று திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடத்துவதற்காக கடந்து மாதம் 25 ஆம் தேதி அனுமதி கேட்டு மனு வழங்கியதாக சொல்லப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் செயல் அலுவலர் அறிவழகன் என்பவரிடம் திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடத்துவதற்கு மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை முதல் திருவெண்ணெய்நல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் திருக்குவிளக்கு மற்றும் சுமங்கலி பூஜை நடத்துவதற்கு ஆட்டோ மூலம் ஒலிபெருக்கி செய்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இன்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் ஈடுபடுவதற்காக ஆலயத்திற்கு வந்துள்ளனர். அப்போது செயல் அலுவலர் நேற்று மாலை 7 மணி அளவில் திருவிளக்கு மற்றும் சுமங்கலி பூஜை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என கூறியதாக சொல்லப்படுகிறது.

we-r-hiring

மேலும் வந்த அனைவரிடமும் விளக்கு ஒன்றிற்கு நூறு ரூபாய் என வழங்க வேண்டுமென கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆலயத்திற்கு வந்த பெண்கள் இலவசமாக திருவிளக்கு மற்றும் சுமங்கலி பூஜை நடத்துவதாக தான் ஆட்டோ மூலமாக தெரிவித்ததாக கூறியுள்ளனர். நூறு ரூபாய் வழங்கினால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கூறி செயல் அலுவலர் உத்தரவின் பெயரில் கோவிலை அடைத்து உள்ளே விடாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை மேற்கொள்ள வந்த பெண்கள் பொதுமக்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஆலயத்தின் நுழைவு வாயிலின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரிக்கை – செல்வப்பெருந்தகை

MUST READ