இன்றைய (நவ.4) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு வாரகாலமாகவே ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து 1 சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.100 குறைந்து 1 கிராம் ரூ.11,250க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து 1 சவரன் ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலை மீண்டும் குறைந்திருப்பது பொதுமக்களுக்கு சற்றே ஆறுதலை அளிக்கிறது. தங்கம் வாங்க ஆர்வம் கொண்டவர்களுக்கு இது சாதகமான செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.
சில்லரை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையும் சரிவை கண்டுள்ளது. கிராமிற்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.165 க்கும் கிலோவிற்கு ரூ.3000 குறைந்து 1 கிலோ ரூ. 1,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்திருப்பது பொதுமக்களுக்கு நிம்மதியை அளிக்கிறது. இருப்பினும், உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளின் மாற்றங்களே வரும் நாட்களில் தங்க விலை நிலவரத்தை தீர்மானிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.



