தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர்பட்டியல் திருத்தம் திட்டமான எஸ்.ஐ.ஆர்(SIR), ஆரம்பத்திலேயே தோல்வியடைந்து விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் புரட்சியின் 108 ஆவது ஆண்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் இரா.முத்தரசன் தலைமையில் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவரும் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன் கலந்து கொண்டு கொடி ஏற்றினார். மேலும் நிகழ்ச்சியில் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர் சந்திபின் பொது மு.வீரபாண்டியன் பேசியதாவது, சுரண்டலற்ற, ஆதிக்கமற்ற சமத்துவ சமுகம் காணும் நோக்கில் நாடும், மனித குலமும் முன்னேற உழைக்கும் மக்கள் “வாகை சூட“ ஏற்பட்ட தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
உழைக்கும் மக்கள் ”அதிகாரத்தை கைப்பற்றிய நாள்” நவம்பர் புரட்சி தினமாக கொண்டாடப்பட்டு வருவகிறது. தமிழ் மண்ணின் பெருமை பாரதி இதை யுக புரட்சி என பாடியுள்ளார். நேருவும் இதை உலக நாகரிகத்தின் முன்னேற்றம் என போற்றியுள்ளார் என குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்ந்து பெசிய அவர், நிர்வாக திறமையின்மை பருவ காலம் உள்ளிட்ட காரணங்களால் எஸ்.ஐ.ஆர் திட்டம் தமிழ்நாட்டில் ஆரம்பத்திலேயே தோல்வியடைந்து விட்டது. இதற்கான தக்க பாடத்தை தமிழ் மக்கள் பாஜகவிற்கு அளிப்பார்கள் என கூறியுள்ளாா். மேலும், அதிமுகவின் நிலைமை பரிதாபமாகவும் பாவமாக உள்ளது என்றும் அதிமுக குரல் ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் குரலாக மெல்ல மெல்ல மாறி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விமர்சித்துள்ளாா்.


