அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரின் இருசக்கர வாகனத்திற்கே இன்சூரன்ஸ்,பொல்யூஷன் இல்லையென்று ஆதாரமாக வைத்து கண்டெய்னர் ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதிக்கு கண்டெய்னர் லாரிகளை இயக்கி செல்லும் கண்டெய்னர் லாரிஓட்டுநர்கள் எர்ணாவூர் பாரதியார் கடற்கரை அருகே செல்போன் பேசியபடி லாரியை இயக்கியுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதியில் உள்ள போக்குவரத்து பெண் போலீசார் பேபி லாரிடிரைவரை மடக்கி அவரது வாகனத்திற்கு பொல்யூஷன் இல்லை என்று அபராதம் விதித்துள்ளார்.

அவர் வண்டியில் டயர் பஞ்சர் ஆகி உள்ளது என உரிமையாளருக்கு தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளாா். வாகனத்தை இயக்கும் போது போக்குவரத்து விதியின்படி செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பதனால் அபராதம் விதித்ததாக போக்குவரத்து உதவி ஆய்வாளர் பேபி தெரிவித்துள்ளாா்.
ஆனால் அபராத தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளாா். அபராத தொகையை நாங்கள் ஆன்லைனில் செலுத்துகிறோம் என்று ஓட்டுனர் கூறியுள்ளாா். ஆனால், போக்குவரத்து போலீசார் உடனடியாக பணமாக அபராத தொகையை செலுத்த வேண்டும் என வற்புறுத்தியுள்ளாா்.
இந்நிலையில் வாக்குவாதம் நீடித்தபோது, கண்டெய்னர் டிரைவர்கள் அந்த பெண் போலீசரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அதில் இன்சூரன்ஸ் மற்றும் பொல்யூஷன் ஆவணங்கள் காலாவதியானது தெரியவந்தது.
இதனை ஆதாரமாக வைத்துக் கொண்டு இன்சூரன்ஸ் இல்லாமல் இருசக்கர வாகன ஓட்டும் உங்களுக்கு யார் அபராதம் விதிப்பது? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் சில நிமிடங்களில் பரபரப்பாக மாறியது.
மேகதாது விவகாரம்… குடும்பத் தொழிலை காப்பாற்ற மௌனம் காத்த திமுக – எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு


