spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுSIR குழப்பத்தில் திணறும் ஊழியர்கள்…உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

SIR குழப்பத்தில் திணறும் ஊழியர்கள்…உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

-

- Advertisement -

பணிச்சுமையை அதிகரிப்பதாக கூறி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்த அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் பொதுமக்கள் அரசின் பல்வேறு சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளாா்.SIR குழப்பத்தில் திணறும் ஊழியர்கள்…உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பணிச்சுமையை அதிகரிப்பதாக கூறி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்த வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பொதுமக்கள்.

we-r-hiring

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பணிச்சுமை அதிகளவில் இருப்பதாக கூறி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை வருவாய்த் துறை சங்கங்களும் முழுமையாக புறக்கணித்துள்ளன.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, பல்வேறுகட்ட கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கைகையும் தமிழக அரசு மேற்கொள்ளாததே, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியிருப்பதாக ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதே போல, உரிய திட்டமிடல் மற்றும் போதிய பயிற்சியில்லாமல் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் விடுமுறை தினத்தன்றும் கட்டாயப்படுத்தி ஈடுபட வைப்பதால் பணிச்சுமையோடு மன உளைச்சலும் அதிகரித்திருப்பதாக வருவாய்த் துறை ஊழியர்கள் தங்களின் வேதனையையும், ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர்.

கிராம உதவியாளர்கள் தொடங்கி, நிர்வாக அலுவலர்கள், ஆய்வாளர்கள், வாட்டாட்சியர்கள் வரை அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களும் தங்களின் பணிகளை புறக்கணித்திருக்கும் நிலையில், மறுபுறம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளோடு அரசின் சேவைகளை பொதுமக்கள் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குவதோடு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி, அவர்களுடைய பணிச்சுமையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளாா்.

விஜயுடன் ராகுல் பேசவே இல்லை! பதறும் காங்கிரஸ்! இது யார் செய்கிற வேலை! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

MUST READ