பீகார் மாநிலத்திற்கு சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டமன்ற கட்சி தலைவராக நிதீஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், அரசு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 243 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ) – பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

ஜே.டி.யூ, போட்டியிட்ட 101 தொகுதிகளில் 85 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ஜே.டி.யூ சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பாட்னாவில், முதலமைச்சர் நிதிஷ் குமார் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், நிதிஷ் குமாரை ஜே.டி.யூ சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்தனர். மறுநாள் நடைபெற உள்ள புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
பாஜகவும் இத்தேர்தலில் 101 தொகுதிகளில் போட்டியிட்டு, 89 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில், பீகார் சட்டசபையில் சட்டமன்ற தலைவராக சாம்ராட் சௌத்ரி, துணை தலைவராக விஜய் சின்ஹா தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த ஆட்சியில் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்கா இருவரும் பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் நடப்பு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி மீண்டும் இருவரையும் பாஜக சட்டமன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவராக தேர்வு செய்துள்ளது.
என்.டி.ஏ கூட்டணியின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, பீகார் மாநிலத்தில் புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா நாளை நடைபெறவுள்ளது. நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சர் பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளது.
பெரிதாக வெடித்த ‘வாரணாசி’ டைட்டில் சர்ச்சை…. பேச்சுவார்த்தையில் ராஜமௌலி!


