spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய் பில்ட்-அப் பிளாப்! 50 சீட் + து.முதல்வர் ஆஃபர்! உமாபதி நேர்காணல்!

விஜய் பில்ட்-அப் பிளாப்! 50 சீட் + து.முதல்வர் ஆஃபர்! உமாபதி நேர்காணல்!

-

- Advertisement -

விஜயை, பாஜக கூட்டணிக்கு அழைத்து வரும் அசைன்மென்ட் ஆதவ் அர்ஜுனாவுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகவும், பிப்ரவரி மாதத்தில் அது நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

விஜய் கூட்டணி தொடர்பாக நாளிதழ்களில் வெளியாகும் தகவல்களின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- காங்கிரஸ் உடன் நடைபெற்று வந்த கூட்டணி பேச்சுவார்த்தை நிறுத்திவிட்டு அதிமுக பக்கம் போய்விடலாம் என விஜய் முடிவு செய்துவிட்டார் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. இப்படி வதந்திகளை பரப்ப வேண்டும் என்று ஊடகங்களுக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. விஜயை எப்படியாவது காலிசெய்ய வேண்டும் என்பது தான் அவர்களுடைய திட்டம். நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளுக்கு விஜயோ, ராகுல்காந்தியோ பதில் சொல்ல மாட்டார்கள் என்கிற தைரியத்தில் இப்படி நாள்தோறும் கூட்டணி தொடர்பான வதந்திகளை வெளியிடுகிறார்கள்.

ஒரு துணை முதல்வர், 50 இடங்கள் கொடுத்தால் போதும் என்று விஜய் ஓகே சொல்லி விடுவார் என்றும் அந்த செய்தியில் தெரிவித்துள்ளனர். இவை எல்லாம் பாஜகவின் செட்டிங் ஆகும். அடுத்து விஜய் பாஜக உடன் சேர்ந்தால், ஆந்திராவில் பெற்றதை போல பெரிய வெற்றியை பெறலாம் என்று சொல்வார்கள். இதற்காக காசு கொடுத்து பாண்டேவை இறக்கிவிட்டார்கள். விஜய்க்கு, ஜனநாயகன் படத்தில் தான் ஆப்பு இருப்பதாக சொல்கிறார்கள். பட வசூல், அதிக கட்டணத்திற்கு டிக்கெட் விற்பனை நடைபெறுவதை வைத்து அவரை பாஜக பிடித்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆதவ் அர்ஜுனா மீது அமலாக்கத்துறை வழக்குகள் இருக்கும் நிலையில், அதை வைத்து மிரட்டி விஜயை பாஜக கூட்டணிக்கு அழைத்து வருவதற்கான அசைன்மெண்ட் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது பிப்ரவரி மாதத்திற்கு பிறகு தான் நடைபெறும். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக அன்புமணி ராமதாஸ், பிரேம லதா ஆகியோர் செல்கிற இடங்களில் எல்லாம் கட்சியினரிடம் இன்னும் ஒரு வருடத்தில் நீங்கள் எல்லாம் அமைச்சர் ஆக போகிறீர்கள் என்று சொல்கிறார்கள். அமைச்சர் ஆவீர்கள் என்று சொன்னால் தான் கட்சியில் இருக்கம் 4 பேராவது இருப்பார்கள். பாமக இரண்டாக பிரிந்து கிடக்கும் நிலையில், அன்புமணியால் 2 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது. அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில் இவர்கள் இருவரையும் ஆதரித்த வன்னிய மக்கள் கதைதான் முடியப் போகிறது.

ஓபிஎஸ் தொகுதியில் சென்று கட்சி கூட்டத்தை பிரேமலதா நடத்தியுள்ளார். 15 வருடமாக இந்த மண்ணுக்கு விடிவு கிடைக்கவில்லை. இன்னும் ஒரு வருடத்தில் போடி மக்களுக்கு விடிவு கிடைக்கும். தேமுதிக எம்எல்ஏ அல்லது தேமுதிக கூட்டணி எம்எல்ஏ வருவார். ஓபிஎஸ் இடம் இருந்து தொகுதியை மீட்போம் என்று பிரேமலதா கூறியுள்ளார். ஓபிஎஸ், என்டிஏ கூட்டணியில் கடைசியில் சேர்ந்துவிடுவார். அவருக்கும் சேர்த்துதான் என்டிஏ 100 தொகுதிகளை கேட்கிறது. அதிமுக 134 இடங்களில் போட்டியிடும்.

மற்ற 100 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும். பாஜகவின் தொகுதிகளில் செங்கோட்டையன், டிடிவி தினகரன் போன்றவர்களுக்கு பிரித்து கொடுத்துவிடுவார்கள். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சீமான், பிரேமலதா, டிடிவி தினகரன் போன்றவர்கள் உதிரியாக நிற்காமல், உறுதியாக நிற்க வேண்டும். அனைவரும் தங்களுடன் கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். தமிழிசை சௌந்தரராஜனுக்கு இந்த தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று விடுவார்.

அமித்ஷா தமிழகம் வரும்போது தான் கூட்டணி தொடர்பான முடிவுகள் இறுதியாகும். என்டிஏ கூட்டணிக்குள் யார், யாரை கொண்டு வருவது என்பது தெரியவரும். வங்கதேசத்தில் ஷேக் ஹசினாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அதேபோல் இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையர் கைது செய்யப்படுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஜெர்மனியில் ஹிட்லர் வீழ்த்தப்பட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் ஆணையர் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதித்தார்கள். அதேபோல், ஞானேஸ்குமாரை என்றைக்கு இருந்தாலும் விடக்கூடாது. அவருக்கு தண்டனை வழங்கியே தீர வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ