தமிழ்நாட்டில் 6 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 39 இடங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில், சென்னை எண்ணூரில் 26 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், மாமல்லபுரம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக டிட்வா கரையைக் கடக்கும் எனவும், வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலப் பகுதி கடந்த ஆறு மணி நேரமாக ஒரே இடத்தில் நிலவுகிறது எனவும் வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலப் பகுதி மணிக்கு 3 கிலோ மீட்டா் வேகத்தில் நகா்கிறது. சென்னையிலிருந்து 40 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமையம் வலுவிழுந்துள்ளது. தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரைகளிலிருந்து 25 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமையம் நிலைக் கொண்டுள்ளது. தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென் மேற்கு திசையில் நகா்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்திற்கு வலுவிழக்காமல் அப்படியே நீடிக்கும். 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வழுவிழக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 29 பேர் இலங்கையிலிருந்து மீட்பு…முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி…



