நாடு முழுவதும் நடைபெறும் போராட்டதால் ரயில் சேவை பாதிப்பு இருக்காது என தொழிற் சங்கத்தினர் தெரிவித்தனர்.
காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும், Running allowance மற்றும் travelling allowance-ஐ உயர்த்த வேண்டும், ஒரு வாரத்துக்கு 46 மணி நேரம் ஓய்வு வழங்க வேண்டும், Travelling allowanceக்கு 70 சதவீத வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி AILRSA – All India Loco Running Staff Association- ஆல் இந்தியா லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசன் சார்பில் இன்று காலை 10 மணி முதல் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
கோட்ட அலுவலகங்கள் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. பணிக்கு செல்பவர்கள் சாப்பிடாமல் ரயில் இன்ஜின் ஓட்டுவார்கள். மற்றவர்கள் கோட்ட அலுவலகங்கள், புதிய ரயில்வே நிலையங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்படாது எனவும் தொழிற் சங்கத்தினர் தெரிவித்தனர்.
ஆவடியை சூழ்ந்த மழைநீர்… அதிரடியாய் களத்தில் இறங்கிய அமைச்சர்கள்…



