கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டிட்வா புயல் மழை காரணமாக, விமான பயணிகள் பலர், தங்களுடைய விமான பயணங்களை தவிர்த்து விட்டதால், விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது.

இதை அடுத்து போதிய பயணிகள் இல்லாமல், சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில், புறப்பாடு வருகை விமானங்கள், 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதோடு சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள், வரும் விமானங்கள் மொத்தம் 29 விமானங்கள், ஒரு மணி நேரத்தில் இருந்து, 5 மணி நேரம் வரை தாமதங்கள் ஆகி உள்ளன.
இதைப்போல் மழை புயல் பாதிப்பு காரணமாக, இன்று சென்னை விமான நிலையத்தில் 52 விமான சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் டிட்வா புயல் மழை காரணமாக, பெருமளவு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் இன்று அதிகாலையில் இருந்து இன்று பகல் 2 மணி வரை 13 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அந்த விமானங்கள் அகமதாபாத்,அந்தமான்,மும்பை,கௌகாத்தி,புவனேஸ்வர்,கொச்சி, டெல்லி கோவை பெங்களூர் ஆகிய உள்நாட்டு விமானங்கள் ஆகும். அதைப்போல் சென்னையில் இருந்து இன்று அதிகாலை நான்கு முப்பத்தைந்து மணிக்கு இந்தோனேசியா செல்ல வேண்டிய சர்வதேச விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதைப்போல் சென்னைக்கு வரும் 10 விமானங்கள் என்று பகல் 2 மணி வரையில், ரத்து செய்யப்பட்டுள்ளன. புனே, அந்தமான் புவனேஸ்வர் கௌஹாத்தி மும்பை கொச்சி ஜெய்ப்பூர் விஜயவாடா உள்ளிட்ட உள்நாட்டு விமானங்கள் ரத்து ஆகி உள்ளன.
இதைப்போல் சென்னை விமான நிலையத்தில் இன்று பகல் 2 மணி வரையில் புறப்பாடு மற்றும் வருகை விமானங்கள் 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதைப்போல் சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் இருந்து பகல் 2:00 மணி வரையில் 18 விமானங்கள் தாமதம் ஆகி உள்ளன. மும்பை,புனே, ஹைதராபாத்,அந்தமான்,திருச்சி,சிலிகுரி,டெல்லி,பாட்னா,கொல்கத்தா,மதுரை,சேலம் ஆகிய உள்நாட்டு விமானங்கள் மற்றும் சிங்கப்பூர் செல்லும் 2 சர்வதேச விமானங்கள். இந்த விமானங்கள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து, நான்கு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஆகி உள்ளன.
அதைப்போல் சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் பகல் 2 மணி வரையில் 11 விமானங்கள் தாமதம் ஆகி உள்ளன. கொல்கத்தா,டெல்லி,புனே, அகமதாபாத்,திருச்சி,அந்தமான்,யாழ்ப்பாணம்,மும்பை ஆகிய உள்நாட்டு விமானங்கள், சிங்கப்பூர் தோகா ஆகிய சர்வதேச விமானங்கள், இந்தப் பத்து விமானங்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் வரை தாமதம் ஆகி உள்ளன.
இதைப்போல் சென்னை விமான நிலையத்தில் புயல் மிரட்டல் கனமழை காரணமாக, பயணிகள் பெருமளவு இல்லாததால் புறப்பாடு வருகை விமானங்கள் 23 விமானங்கள் ரத்தாகியுள்ளது. அதைப்போல் வருகை புறப்பாடு விமானங்கள் 29 விமானங்கள் நீண்ட நேரம் தாமதமாகி உள்ளன.
இதைப்போல் சென்னை விமான நிலையத்தில் இன்று பகல் 2 மணி வரையில் மழை பாதிப்பு காரணமாக, 52 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


