spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் சராசரியாக 2500-க்கும் மேற்பட்டோர் புற்று நோயால் பாதிப்பு - பிரதாப் ராவ் ஜாதவ்...

தமிழகத்தில் சராசரியாக 2500-க்கும் மேற்பட்டோர் புற்று நோயால் பாதிப்பு – பிரதாப் ராவ் ஜாதவ் தகவல்

-

- Advertisement -

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 2,500-க்கும் மேற்பட்டோர் பல்வேறு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளாா்.தமிழகத்தில் சராசரியாக 2500-க்கும் மேற்பட்டோர் புற்று நோயால் பாதிப்பு  - பிரதாப் ராவ் ஜாதவ் தகவல்நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் நீரஜ் சேகர் என்பவர், “நாடு முழுவதும் மாநிலம் வாரியாக புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ், “நாட்டில் 19 கேன்சர் சிகிச்சை மையங்கள் மற்றும் 20 பிராந்திய புற்றுநோய் பராமரிப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருவதோடு அதிநவீன சிகிச்சை முறைகள் அங்கு வழங்கப்பட்டு வருவதாகவும்,  மேலும் நாடு முழுவதும் உள்ள 22 AIIMS மருத்துவமனைகளில் புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சை பிரிவு உள்ளிட்டவை செயல்படுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, நாடு முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு 14.61 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதன் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 15.33 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு 93,536 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஆண்டில் அதன் எண்ணிக்கை 98,386 ஆக அதிகரித்துள்ளதும், சராசரியாக தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2000-2,500 பேர் வரை புற்றுநோய் பாதிப்பால் பாதிக்கப்படுவதும் மத்திய அரசின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது“ என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் கூறினாா்.

ரியோவின் அடுத்த அதிரடி” ராம் in லீலா” படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

we-r-hiring

MUST READ