spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகேசை இப்ப போடு! விஜய் தெறித்து ஓட்டம்! தடை மேல் தடை வாங்கிய தவெக!

கேசை இப்ப போடு! விஜய் தெறித்து ஓட்டம்! தடை மேல் தடை வாங்கிய தவெக!

-

- Advertisement -

விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்காத புதுச்சேரி அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படாததன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது. புஸ்ஸி ஆனந்த் டிஜிபி, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரை சந்தித்து பேசியபோதும் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கவில்லை. கரூரில் அவ்வளவு பெரிய துயர சம்பவம் நடைபெற்ற பிறகும் புதுச்சேரியில் ரோடு ஷோ செல்கிறேன் என்றால் முதலமைச்சர் ரங்கசாமி யோசிக்கிறார்.

அங்கு இதேபோன்ற சம்பவம் நடைபெற்றால் ரங்கசாமியின் ஆட்சிக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும். மேலும், புதுச்சேரி போலீசார் உரிய பாதுகாப்பு தரவில்லை என்பார்கள். என்னை பொறுத்தவரை விஜய், ரோடு ஷோ செல்வதற்கு தகுதி அற்றவர். தன்னுடைய சொந்த தொண்டர்களுடைய உயிர்களை பாதுகாக்க தவறிய விஜய்க்கு, ரோடு ஷோ நடத்துவதற்கு எந்த தகுதியும் கிடையாது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்த விவகாரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார்.

கரூர் சம்பவத்தால் விஜயின் 'ஜனநாயகன்' படத்தை துரத்தும் சிக்கல்கள்..... ரிலீஸுக்கும் ஆப்பா?

விஜய் பிரச்சாரத்துக்கு முழுமையாக அனுமதி மறுக்கப்படவில்லை. அவருடைய ரோடு ஷோவுக்கு மட்டுமே அனுமதி தரவில்லை. பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். தமிழக காவல்துறை அரசியல் ரீதியாக பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்தால் விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்கியது. ஆனால் புதுச்சேரி அரசு அச்சமின்றி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஏதாவது பிரச்சினை என்றால் தவெக நீதிமன்றத்திற்கு செல்லட்டும். அப்போது நீதிபதி ஒரு சில கேள்விகள் கேட்பார்கள்.

அதற்கு பயந்து சிபிஐக்கு போனால், வேறு நீதிமன்றம் கேட்பார்கள். இந்தியில் பதில் சொல்லிக்கலாம் என்று போயிருக்கிறார்கள். மாநில உரிமைகளுக்காக பாடுபட்ட அண்ணா, எம்ஜிஆர் பற்றி விஜய் பேசுவார். ஆனால் சிபிஐ வந்து விசாரிக்க வேண்டும். மாநில காவல்துறை விசாரிக்கக்கூடாது. இவர்களுக்கு நிரந்தரமான கொள்கை எதுவும் கிடையாது. மீறி கொள்கையை கேட்டால் திமுக எதிர்ப்பு என்பார்கள்.

பொய் சொல்வதில் புதுவை ஆளுநர் தமிழிசை கைதேர்ந்தவர் - முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

தவெக – காங்கிரஸ் இடையே நல்ல வேளையாக கூட்டணி அமையவில்லை.  அப்படி அமைந்திருந்தால் கேரளாவுக்கு அழைத்துச் சென்று பிரச்சாரம் செய்திருப்பார்கள். கேரளாவில் சென்று அனுமதி கேட்கிறபோது கூட கேரள முதலமைச்சர் சரியில்லை. போலீசார் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்பார்கள். ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை போயிருக்கிறார். அதற்கு போலீசார் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் ஒன்றரை கோடி பேர் கலந்துகொண்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகளை மிகவும் சாதாரணமாக எடை போடுகிறார்கள். அரசியல்வாதி என்பவருக்கான முதல் தகுதி அவர்கள் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அந்த தகுதியை விஜய் வளர்த்துக்கொள்ள வேண்டும். தன்னுடைய சொந்த கட்சியினரின் நிகழ்ச்சிக்கு கூட விஜய் செல்வதில்லை. இவருக்கு தெரிந்ததெல்லாம் பேருந்து தான். எடப்பாடி பழனிசாமியை பார்த்து காப்பிடியத்தாரா? என்று தெரியவில்லை. அதை விஜய் மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

திமுகவை சேர்ந்த 2 அமைச்சர்கள் விஜயுடன் பேசுவதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனியார் தொலைக்காட்சி பேட்டியில் சொல்கிறார். குறிப்பாக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை குறித்தும் மீம்களை வெளியிடுகிறார்கள். அவருடைய அரசியல் பாரம்பரியம் தெரியாதவர்கள் அப்படி பேசலாம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் திமுக என்கிற கட்சிக்கு வித்திட்டவர்கள் அவர்கள். அவர்களுக்கு என்று அங்கு ஒரு பெயர் உள்ளது. தற்போதும் மதுரை மத்திய தொகுதியில் பணம் கொடுக்காமல் தான் பிடிஆர் வெற்றி பெற்றார். பிடிஆர் திமுகவில் தற்போது மனக்கசப்பில் தான் இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு நிகரான பாரம்பரியம், படிப்பு, கொள்கைப்பிடிப்பு போன்றவை பிடிஆர்-க்கு உள்ளது. அவர் ஒருவேளை தவெகவுக்கு செல்கிறபோது, விஜய் பிடிஆரை முதலமைச்சர் ஆக்குகிறேன் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்வார். அவர் வெறும் அமைச்சராக இருப்பதற்கு, திமுகவிலேயே கௌரவமாக இருந்துவிடுவார் அல்லவா? எல்லோரும் செங்கோட்டையனை போன்றே இருப்பார்களா? ஆசை யாரை விட்டது. எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி செங்கோட்டையனே வந்துவிட்டார். பிடிஆர் வர  மாட்டாரா? என்று கொளுத்தி போடலாம். பிடிஆர் தேர்தலில் நிற்காமல் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் தவெகவுக்கு ஒருபோதும் போக மாட்டார்.

பிடிஆர் அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வரவில்லை. பிடிஆர் சொத்துடன், விஜயின் சொத்தை ஒப்பிட்டு பார்த்தோம் என்றால் விஜய் பரம ஏழை. பி.டி.ஆர். சொத்தை கணக்கு எடுக்க ஆட்களே இல்லை. விஜய் மாதிரி, என்றைக்காவது பி.டி.ஆர். நான் வெளிநாட்டில் ராஜா மாதிரி இருந்தேன். கை நிறைய சம்பாதித்தேன். அதை எல்லாம் விட்டு விட்டு அரசியலுக்கு வந்தேன் என்று சொல்லி இருக்கிறாரா? பரம்பரை பணக்காரரான பிடிஆர் என்றைக்காது, தன்னுடைய பணத்திமிரை காட்டியிருக்கிறாரா?

அவர் அரசியல் வேலையை பிடித்து செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டை பொருளாதார ரீதியில் மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் வந்தார். ஆனால் அதில் தோல்வி அடைந்துவிட்டார். அந்த வலி வேதனை அவரிடம் உள்ளது. அவரை கூப்பிட்டு ப்ரோ வைப் பண்ணலாம் என்று சொல்கிறார்கள். பி.டி.ஆர். அந்த தப்பை பண்ண மாட்டார். கட்சியில் பிரச்சினை என்றால் அவர் திமுகவில் இருந்து விலகுவாரே தவிர ஒருபோதும் தவெகவுக்கு செல்ல மாட்டார்,  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ