Homeசெய்திகள்இந்தியாபோலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தீவிரம்… திமுகவினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்

போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தீவிரம்… திமுகவினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்

-

- Advertisement -

போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் சட்டபேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தீவிரம்… திமுகவினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்

புதுச்சேரியில் செயல்பட்டதாகக் கூறப்படும் போலி மருந்து மற்றும் மாத்திரைகள் தயாரிப்பு தொழிற்சாலை தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த போலி மருந்து கும்பல் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ராஜா உட்பட பத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்ய தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

we-r-hiring

இவ்விவகாரத்தில் ராஜாவுக்கு சில அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்குக் கோடி கணக்கில் லஞ்சம் வழங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் தகவல்கள் வெளியாகி, அரசியல் சூடு அதிகரித்துள்ளது. போலி மருந்துகள் மூலம் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திய குற்றவாளிகளையும், அவர்களுக்கு துணைநின்றவர்களையும் உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, திமுக சார்பில் சட்டப்பேரவையை முற்றுகை செய்யும் போராட்டம் நடத்தப்படும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் காமராஜர் சிலை அருகே திரண்டனர். அங்கிருந்து நேருவீதி, காந்தி வீதி, மிஷின் வீதி வழியாக ஊர்வலமாக சட்டப்பேரவை நோக்கி முன்னேறினர்.

ஊர்வலம் ஆம்பூர் சாலையை எட்டியபோது, காவல்துறை பெரும் பாதுகாப்பு வளையம் அமைத்து பேரிகாடுகளால் தடுப்புநிர்ப்பணம் செய்தது. இதனால் போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினருக்கிடையே கடுமையான தள்ளுமுள்ளும், வாக்குவாதமும் ஏற்பட்டது. நிலைமை ஒரு கட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

விஜய் பொதுக்கூட்டம் காரணமாக நாளை உப்பளம் சாலையில் போக்குவரத்து தடை

MUST READ