முன்னாள் அமைச்சா் வளா்மதி, தஞ்சை பெரிய கோயில் ஆனாலும் தாஜ்மஹால் ஆனாலும் அதன் உறுதி வெளியே தெரிவதில்லை என அதிமுக பொதுக்குழுவில் உரையாற்றினாா்.
அதில், “அதிமுகவின் வலிமை, அமைச்சர்களால் அல்ல, செயலாளர்களால் அல்ல எதிரே அமர்ந்திருக்கும் தொண்டர்கள் தான் அஸ்திவாரம். தொண்டர்கள் இல்லாமல் அதிமுகவோ, ஆட்சியோ இல்லை. நீங்கள் இருக்கும் வரை இந்த கட்சியை சாய்க்கவோ, சரிக்கவோ முடியாது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இல்லாமல் யாரும் அரசியல் பேச முடியாது. எடப்பாடிக்கு எதிரிகளும் உள்ளனர், துரோகிகளும் உள்ளனர். இவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள். இந்த துரோகிகள் வரலாற்றின் குப்பைத் தொட்டிகள், தான் தோன்றி பறவைகள், போனவர்கள் எல்லாம் பத்தோடு பதினொன்று என உள்ளனர். வரும் தேர்தலில் வென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவது உறுதி. அதனை புயல், பூகம்பமே வந்தாலும் தடுக்க முடியாது“ என் முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி கூறியுள்ளாா்.
எடப்பாடி தலைமையில் இருக்கும் அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது– சி.வி.சண்முகம் உறுதி



