spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்திமுகவின் கட்டமைப்பு தன்னை ஈர்த்ததால் அக்கட்சியில் இணைந்துள்ளேன் – விஜயின் Ex மேனேஜர்

திமுகவின் கட்டமைப்பு தன்னை ஈர்த்ததால் அக்கட்சியில் இணைந்துள்ளேன் – விஜயின் Ex மேனேஜர்

-

- Advertisement -

நடிகர் விஜயின் முன்னாள் மேனேஜரான பி.டி.செல்வக்குமார் இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார்.திமுகவின் கட்டமைப்பு தன்னை ஈா்த்ததால் அக்கட்சியில் இணைந்துள்ளேன் – விஜயின் Ex மேனேஜர்விஜயின் முன்னாள் மேனேஜர் PT செல்வக்குமார் திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேட்டியில், “அரசு பள்ளிகளுக்கு கட்டிடம் கலையரங்கம் போன்று சேவை செய்கிறோம் ஏழை எளிய மக்களுக்கு தொண்டு செய்வதுதான் நோக்கம் தனி இயக்கமாக இருந்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்பதால் இன்று முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளேன். சிறப்பாகதமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறார். அதனால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் இணைந்துள்ளேன்.

விஜய் ஒரு நடிகர் நடிகராக சிறப்பாக பணியாற்றினாா் என்பதால் தான் அவருடன் பயணித்தேன். விஜய் மக்கள் இயக்கத்துக்கு நான் ஒரு தூணாக இருந்தேன் என்று சொல்லி உள்ளனர். விஜய் கட்சியில் அவரது தந்தையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை புதிதாக பலர் வந்துள்ளனர். அதனால் என்னை போன்றவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மக்களையும், ரசிகர்களையும் சரியாக வழி நடத்துவாரா என்பது எனக்கு தெரியவில்லை. நல்ல கூட்டம் தீயக் கூட்டம் என்று உள்ளது. தீய கூட்டம் நல்லவர்களை வெளியே தள்ளுவார்கள். புசி ஆனந்த், கடைசியாக சேர்ந்த ஆதவ் அர்ஜுனா யாருமே தியாகிகள் கிடையாது. விஜயுடன் ஆரம்ப காலத்தில் இருந்து தியாகம் செய்தவர்கள் யாரும் அவருடன் இப்போது இல்லை. விஜய் ஒரு நிலவு, ஆனால் அமாவாசை  அண்ணனோ  ஒரு சூரியன் என்பதால் திமுகவில் சேர்ந்து உள்ளேன்.

we-r-hiring

விஜய் அவருடன் தந்தையுடன் நல்ல உறவில் இல்லை தந்தைக்கு விஜய் மரியாதை கொடுக்கவில்லை. ஒரு நடிகையை பார்ப்பதற்கு கூலி தொழிலாளி ரசிகர்கள் அனைவரும் வருவார்கள். விஜய்க்கு வரும் கூட்டம் எல்லாம் ஒரு புரட்சி விஜய்க்கு வாக்களிப்பார்கள் என்று கனவில் கூட நினைக்க கூடாது” என்று கூறியுள்ளாா்.

தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் – முதல்வர்

 

MUST READ