spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்சேத்தியாத்தோப்பில் அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமல் அடாவடி செய்யும் தனியார் பஸ் ஒட்டுநர்கள்….

சேத்தியாத்தோப்பில் அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமல் அடாவடி செய்யும் தனியார் பஸ் ஒட்டுநர்கள்….

-

- Advertisement -

சேத்தியாத்தோப்பில், பேருந்து நிறுத்த பகுதியில் தனியார் பேருந்துகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமலும் அடாவடி செய்து வரும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.சேத்தியாத்தோப்பில் அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமல் அடாவடி செய்யும் தனியாா் பஸ் ஒட்டுநர்கள்…. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியில் அடிக்கடி தனியார் பேருந்துகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமலும் அடாவடி செய்து வருவது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவங்களாலேயே போக்குவரத்தை சரி செய்யும் பொருட்டு சேத்தியாத்தோப்பு உட்கோட்ட டிஎஸ்பி விஜி குமார் மற்றும் போலீசார் விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு கருதி பேரி கார்டுகளை அமைத்து சரி செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பேரி கார்டுகளை தாண்டி சென்று தனியார் பேருந்து தேசிய நெடுஞ்சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நீண்ட நேரம் நின்றதால், புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் நோக்கி செல்லும் அரசு பேருந்து ஓட்டுநர் செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். நீண்ட நேரம் வேண்டுமென்றே தனியார் பேருந்து ஓட்டுநர் தேசிய நெடுஞ்சாலை நடுவே நிறுத்தியதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இச்சம்பவத்தால் பல பேருந்துகள் செல்ல முடியாமல் தவித்தன. சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியில் தனியார் பேருந்துகள் செய்யும் அடாவடித்தனங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

we-r-hiring

எனவே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், மற்ற பேருந்துகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் போவதற்கும் காரணமான தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை – முதல்வர் பெருமிதம்

MUST READ