எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் பழக்கம் மத்திய அரசுக்கு இல்லையென திருச்சி சிவா கடுமையாக விமர்சித்துள்ளாா்.
டெல்லியில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசியதாவது, ”நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் மத்திய அரசின் மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாக கடுமையாக விமர்சித்தார். எதிர்க்கட்சிகளின் குரலை திட்டமிட்டு புறக்கணிக்கும் போக்கே இந்த கூட்டத்தொடரில் வெளிப்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

வாக்காளர் சீர்திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தபோதும், அதனை ஏற்க மத்திய அரசு மறுத்ததாக திருச்சி சிவா தெரிவித்தார். அதற்கு மாற்றாக ‘வந்தே மாதரம்’ தொடர்பான விவாதத்தை முன்னிலைப்படுத்தி, ஒரே நோக்கத்துடன் கூட்டத்தொடர் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது முழுமையாக மத்திய அரசின் அரசியல் நோக்கத்தை பிரதிபலிப்பதாகவும், எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு எந்த முறையான பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
குறுகிய கால விவாதம், கவன ஈர்ப்பு தீர்மானம், ஒத்திவைப்பு தீர்மானம் ஆகியவற்றின் மூலம் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச எதிர்க்கட்சிகள் விரும்பின. ஆனால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாகவும், ஜனநாயக மரபுகள் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். கூட்டாட்சி அடிப்படையில் ஒன்றிணைத்தால் மட்டுமே அது முழுமையாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக பேசுகையில், அந்தத் திட்டத்தின் பெயரை மாற்றியிருப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறினார். மகாத்மா காந்தியின் பெயரை அந்தத் திட்டத்திலிருந்து நீக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். தேசத்திற்காக போராடிய தலைவர்களிடம் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை; அரசியல் விருப்பமே மேலோங்கியுள்ளது என்றும் விமர்சித்தார்.
மேலும், நாடாளுமன்ற உலகத்திற்குள் காந்தி, முக்கிய நுழைவு வாயில் அரகே நிறுவப்பட்டிருந்த காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் போன்றவர்களின் சிலைகள் காரணம் இல்லாமல் இரண்டு தலைவர்களின் சிலைகளையும் நாடாளுமன்றத்தின் பின்புறத்தில் ஒதுக்குப்புறத்தில் இடமாற்றி வைத்துள்ளார்கள் இத கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசு மட்டுமே இந்த திட்டத்திற்கான 100% தர வேண்டும் .ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தில் 40 விழுக்காடு நிதி மாநில அரசு தர வேண்டும். மாநிலங்கள் மீது சுமையை கொடுக்கும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் கூறினார்.
அதிமுகவை விமர்சித்த திருச்சி சிவா, குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக ஆதரவளித்ததன் மூலம் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். பயங்கரவாத தடுப்புச் சட்டம், நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் அதிமுக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் மாறுபட்ட நிலைப்பாடு எடுத்துள்ளதாகவும் சாடினார்.
வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் போராட்டம் நடத்தியபோதும் மத்திய அரசு அதை நிறைவேற்றியது. அந்தப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்ததை நினைவூட்டிய திருச்சி சிவா, இதற்கும் மத்திய அரசு பொறுப்பேற்கவில்லை என்றார்.
வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களில் நோட்டீஸ் அளித்தபோதும், ஒன்றையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் பழக்கம் மத்திய அரசுக்கு இல்லையெனவும் திருச்சி சிவா கடுமையாக விமர்சித்துள்ளாா்.”
அடுத்த 7 நாட்களுக்கும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் – வானிலை ஆய்வு மையம்


