spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசாத்தான்குளம் வழக்கு… காவல் ஆய்வாளர் மருத்துவ சிகிச்சைகளைப் வெளியில் பெற உச்சநீதிமன்றம் அனுமதி!!

சாத்தான்குளம் வழக்கு… காவல் ஆய்வாளர் மருத்துவ சிகிச்சைகளைப் வெளியில் பெற உச்சநீதிமன்றம் அனுமதி!!

-

- Advertisement -

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் வெளியில் மருத்துவ சிகிச்சைகளைப் பெற உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.சாத்தான்குளம் வழக்கு… காவல் ஆய்வாளர் மருத்துவ சிகிச்சைகளைப் வெளியில் பெற உச்சநீதிமன்றம் அனுமதி!!கடந்த 2020-ல் சாத்தான் குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன், தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுக்களை கடந்த காலங்களில் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த நிலையில் தனக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் ஏற்பட்டு இருப்பதாகவும், எனவே மருத்துவ சிகிச்சைகள் பெற தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகரத்னா தலைமையிலான இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிவழகன், ஸ்ரீதருக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பிரச்சனைகள் தொடர்பான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பித்தார்.

we-r-hiring

மேலும் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு இருப்பதால் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டி உள்ளது. எனவே இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிறையில் இருந்து வெளியே சென்று அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை பெற அனுமதி வழங்குவதாக உத்தரவிட்டனர். அதே நேரத்தில் இது ஜாமீன் கிடையாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு – அமைச்சர் பி.மூர்த்தி

MUST READ