spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு1000 பேருக்கு வேலை…தமிழ்நாடு ஏ.ஐ. தொழில்நுட்ப மாநிலமாக மாறும் - டி.ஆர்.பி.ராஜா

1000 பேருக்கு வேலை…தமிழ்நாடு ஏ.ஐ. தொழில்நுட்ப மாநிலமாக மாறும் – டி.ஆர்.பி.ராஜா

-

- Advertisement -

ரூ.10,000 கோடி முதலீடு, 1000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் சர்வோம் ஏ.ஐ. நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.1000 பேருக்கு வேலை…தமிழ்நாடு ஏ.ஐ. தொழில்நுட்ப மாநிலமாக மாறும் - டி.ஆர்.பி.ராஜா

உலகமே செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence -AI) தொழில் நுட்பத்தை நோக்கி செல்கிற நிலையில், தமிழ்நாடு அரசு அந்த வளர்ச்சியில் முன்னோடியாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.

we-r-hiring

ரூ.10,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு உயிர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கு வகையில் சர்வோம் ஏ.ஐ. நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஓப்பந்தம்(MOU)  மேற்கொண்டுள்ளது.

இந்த திட்டம் ஒரு செயற்கை நுண்ணறிவு பூங்கா அல்லது கிராமம் போன்று உருவாகும் என தெரிவித்தாா். இதன் மூலம், இதன் மூலம் உயர்தர டேட்டா சென்டர்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

இந்த முதலீட்டின் முக்கிய அம்சமாக, மிகப்பெரிய தரவு மையம் (Data Centre) அமைக்கப்பட உள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் தரவுகள் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்ப அடிப்படையிலான முடிவெடுப்பு மேலும் மேம்படும் என அமைச்சர் கூறினார்.

இந்த தரவு மையத்தை அமைப்பதற்காக சென்னை ஐஐடிக்கு அருகில் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ரூ.10,000 கோடி முதலீட்டில் பெரும்பகுதி தரவு மையம், ஆராய்ச்சிக்கு செலவழிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தாா்.

தமிழ்நாடு முன்னோடி என்பதால் இந்த முதலீட்டின் மூலம் ஏ.ஐ. துறையில் மேலும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கப்படும் என்றும், ஏ.ஐ தொழில்நுப்பத் துறையில் இது மாநிலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை அளிக்கும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.

இத்திட்டத்தின் முக்கிய சிறப்பு நம் ஊரில் ஆராய்ச்சி செய்யப்பட்டு உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பதாகும். இது இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இது தமிழ்நாட்டை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மையமாக மாற்றும் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.

மாணவர்கள் லேப்டாப்பை கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் பயன்படுத்த வேண்டும் – துணை முதலமைச்சர்

MUST READ