திருவள்ளூா் மாவட்டம், பவானி அம்மன் கோயில் அருகே அரியப்பாக்கத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக் கோட்டை அடுத்த பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அருகே அரியப்பாக்கம் கிராமத்தை சோ்ந்த பெண்கள் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனா். இவா்கள் வியாபாரத்தை முடித்து விட்டு ஷோ் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனா். அப்போது, செங்குன்றத்திலிருந்து ஊத்துக்கோட்டைக்குச் சென்ற அரசு பேருந்து திடீரென எதிா்பாராதவிதமாக ஷோ் ஆட்டோ மீது மோதி பயங்கர விபத்துள்ளாது. பேருந்து மோதியதில் ஷோ் ஆட்டோ குப்புற கவிந்தது. இந்த ஆட்டோவில் பயணம் செய்த 6 பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் சீசன் வந்தால் தமிழ்நாடு பக்கம் வரும் பிரதமர் மோடி – முதல்வர் விமர்சனம்

