முதலமைச்சரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரா் கைது செய்யப்பட்டாா்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகன் (43) என்பவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். தேனாம்பேட்டை போலீசார் அவா் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், பெண்கள் குளிப்பதை எட்டிப் பார்க்கும் பழக்கம் உள்ளவா் பாலமுருகன் என்பதும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு முறை மல்லி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் பாலமுருகனின் ஒழுங்கீனமான செயல்கள் காரணமாக அவரது மனைவி ஆறு வருடங்களுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். இதனால் விரக்தி அடைந்த பாலமுருகன் குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிய வந்துள்ளது.
தூத்துக்குடியில் சோகம்!! 3 மாணவர்கள் பரிதாபமாக பலி!! கதறும் பெற்றோர்கள்!!


