spot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்கள்ளக்குறிச்சி நகராட்சி காய்கறி கடைகளை அகற்ற எதிர்ப்பு….

கள்ளக்குறிச்சி நகராட்சி காய்கறி கடைகளை அகற்ற எதிர்ப்பு….

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி பெருந்தலைவர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு இடம் வழங்காமல் காய்கறி மார்க்கெட்டை இடிக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காய்கறி வியாபாரிகள் திடீரென மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி நகராட்சி காய்கறி கடைகளை அகற்ற எதிர்ப்பு….கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்காமல் காய்கறி மார்க்கெட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், முதற்கட்டமாக தற்போது வியாபாரம் செய்து வரும் கடைகளில்  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஏழுமலை தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பேசி சுமுக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தது. தொடர்ந்து காய்கறி வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைத்து சென்றனர். இதனால் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

யாருடன் கூட்டணி என்று பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள்” – செங்கோட்டையன் அதிரடி!

we-r-hiring

MUST READ