spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெயல்படுத்த நினைக்கும் திட்டங்களையும் அரசு அதிகாரிகள் பரிந்துரை செய்யலாம்- மு.க.ஸ்டாலின்

செயல்படுத்த நினைக்கும் திட்டங்களையும் அரசு அதிகாரிகள் பரிந்துரை செய்யலாம்- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

செயல்படுத்த நினைக்கும் திட்டங்களையும் அரசு அதிகாரிகள் பரிந்துரை செய்யலாம்- மு.க.ஸ்டாலின்

கடலூர், விழுப்புரம் , கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

விழுப்புரத்தில் ஆட்சியர்களுடனான ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசின் திட்டங்களை அதிகாரிகள் விரைந்து முடிக்கவேண்டும். அனைத்து பணிகளையும் தரமானதாக நிறைவேற்றி முடிக்க வேண்டும். அரசாக் அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும். திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் கூடாது; மக்களோடு பழகி அவர்களின் தேவையை அறிந்து செயல்படுங்கள். ஒவ்வொரு திட்டப்பணிகளும் எந்த அளவில் நடைபெறுகிறது என்பதை கண்காணித்துவருகிறேன். குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

we-r-hiring

பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்உம். ஒதுக்கிய நிதியை மக்களுக்கும், திட்டங்களுக்கும் நிறைவேற்றுவதே திறன்மிகு நிர்வாகம். திறமைமிக்க அலுவலர்கள் என்பதை அரசு அதிகாரிகள் நிரூபிக்க வேண்டும். செயல்படுத்த நினைக்கும் திட்டங்களையும் அரசு அதிகாரிகள் பரிந்துரை செய்யலாம்” எனக் கூறினார்.

MUST READ