spot_imgspot_img
HomeBreaking Newsதைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்…

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்…

-

- Advertisement -

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்…தைப்பூச திருவிழா முருக பக்தர்களுக்கு மிக முக்கியமான ஆன்மீக நிகழ்வாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் தைப்பூச நாளில் தமிழகத்தின் பல்வேறு முருகன் திருத்தலங்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக செல்வது வழக்கம். குறிப்பாக பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை உள்ளிட்ட கோவில்களில் தைப்பூச நாளில் கூட்டம் அலைமோதும்.

இந்த ஆண்டு தைப்பூச திருவிழா பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

we-r-hiring

இந்நிலையில், வார விடுமுறையையொட்டி மக்கள் ஊா்களுக்குச் செல்ல இன்று முதல் 3 நாள்களுக்கு அரசு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இதுவரை 5,000 க்கும் மேற்பட்டோா் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனா். கூட்ட நெரிசலை குறைத்து பக்தர்கள் சிரமமின்றி பயணிக்க வேண்டும் என்பதற்காகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், அனைத்து பஸ் நிலையங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.  TNSTC செயலி, இணையத்தளத்தில் உடனே டிக்கெட்களை முன்பதிவு செய்து நெரிசலின்றி பயணம் செய்யுங்கள்.

தொழில் ஊக்குவிப்பு – தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு பாராட்டு

MUST READ