மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பெண் காவலர் புவனேஸ்வரி (29). கடந்த 2017 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த இவர், ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றும் சிலம்பரசன்( 32) என்பவரை காதலித்து கடந்த 2024 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் திருமணம் ஆன நாளில் இருந்தே சிலம்பரசன் தன் மனைவி புவனேஸ்வரி மீது சந்தேகப்பட்டு தினமும் மது அருந்தி விட்டு வந்து அடித்து சித்திரவதை செய்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த சிலம்பரசன் தன் மனைவி புவனேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இருவரும் உறங்க சென்ற நிலையில் காவலர் புவனேஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் கணவர் இடையில் எழுந்து பார்த்த போது மனைவி தூக்கில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் எழும்பூர் போலீசார் விரைந்து சென்று பெண் காவலர் புவனேஸ்வரி உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் திருமணம் ஆன நாள் முதல் புவனேஸ்வரியின் கணவர் சிலம்பரசன் சந்தேகப்பட்டு அடித்து கொடுமைப்படுத்தி வந்ததும், திருமணத்திற்கு முன்பு புவனேஸ்வரி திருவண்ணாமலையை சேர்ந்த நண்பரும் வழக்கறிஞருமான சிவ மூர்த்தி என்பவருக்கு பணம் கடனாக கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பின் கணவர் சிலம்பரசனுக்கு இந்த விவரம் தெரியவர அவர் பணத்தை திரும்ப வாங்குமாறு புவனேஸ்வரியை வற்புறுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து புவனேஸ்வரி வழக்கறிஞர் (சிவமூர்த்தியிடம்) பணத்தை திருப்பி கேட்ட போது அவர் தர மறுத்ததால் இரு தினங்களுக்கு முன்பு புவனேஸ்வரி இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளாா். இதனால் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. காவலர் சிலம்பரசனிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயின் கோயில்களாக குறி வைத்து நகைகள் கொள்ளை – கொள்ளையன் கைவரிசை


