பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கடந்த 16ம் தேதி அன்று, ஷிம்ஜிதா என்ற பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் (42) தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இந்த வீடியோ வைரலானதால் தீபக் வெளியே செல்ல முடியாமல், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்தனா். அந்த புகாாின் போில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இதனையடுத்து, உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஷிம்ஜிதாவுக்கு கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.


