spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது - முதல்வர்

“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது – முதல்வர்

-

- Advertisement -

உலக தாய்மொழி தினத்தையொட்டி, “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது என முதல்வர் கூறியுள்ளாா்.“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது - முதல்வர்உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள  வலைதளப்பக்கத்தில், “”தமிழே நீ வாழ்ந்திடு!  இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி!

we-r-hiring

நம் தமிழைக் காத்து – அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!” என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

“இன்னும் வலிமையுடன் உழைக்கத் தயாராக உள்ளேன்” – முதல்வர் உரை

 

MUST READ