சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை விரைவாகவும், எளிதாகவும் பெறும் வகையில் புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியுதவியை பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பித்து பெறும் வசதியாக இந்த இணையதள சேவையை தொடங்கி வைத்துள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
https://cmarf.tn.gov.in என்ற இணையதளத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பதிவேற்றப்படும் தகவல்கள் மற்றும் ஆவணங்கள் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பிறகு, தகுதியானவர்களுக்கு நிதியுதவி அவர்கள் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.
இந்த புதிய முறை மூலம் அலுவலகங்களுக்கு பலமுறை செல்ல வேண்டிய அவசியம் குறைந்து, விண்ணப்ப செயல்முறை எளிமையாகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்களை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட சாலை…ரூ.2100 கோடி திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல்


