spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக ஆட்சியில் 58 மாதத்தில் 3400 ரேசன்கடைகள் திறக்கப்பட்டன - அமைச்சர் சக்கரபாணி தகவல்

திமுக ஆட்சியில் 58 மாதத்தில் 3400 ரேசன்கடைகள் திறக்கப்பட்டன – அமைச்சர் சக்கரபாணி தகவல்

-

- Advertisement -

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 2536 ரேசன்கடைகள் திறக்கப்பட்டது. திராவிடமாடல் ஆட்சியில் 58 மாதத்தில் 3400 ரேசன்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தொிவித்துள்ளாா்.திமுக ஆட்சியில் 58 மாதத்தில் 3400 ரேசன்கடைகள் திறக்கப்பட்டன - அமைச்சர் சக்கரபாணி தகவல்

பழனியை அடுத்துள்ள கோரிக்கடவு, தாளையம், கோவில் அம்மாபட்டி கிராமங்களில் 7 கோடி மதிப்பீட்டில்  சிமெண்ட் ஆலை அமைக்கும் பணி, கால்வாய் பணிகளுக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார்.

we-r-hiring

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “ஆட்சிக்கு வந்தவுடன் 21 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் திறக்கப்பட்ட ரேஷன் கடைகளின் எண்ணிக்கை 2536, ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் அரசு பொறுப்பேற்ற 58 மாதங்களில் தமிழகத்தில் திறக்கப்பட்ட ரேஷன் கடைகளின் எண்ணிக்கை 3400 கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இரண்டரை லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்டன்சத்திரத்தில் சேமிப்புக் கிடங்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தை முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்து ஏழு கோடி ரூபாய் செலவில் முருங்கை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடக்கம்…

MUST READ