Homeசெய்திகள்ஆவடிஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

-

- Advertisement -

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!திருவள்ளூா் மாவட்டம், ஆவடி, கன்னியம்மன் நகரை சோ்ந்தவா் ராஜேஷ்குமாா்(39), இவருக்கு மகேஸ்வரி (20) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனா். ராஜேஸ்குமாா் தினம் தினம் குடித்துவிட்டு வந்து மகேஸ்வரியை கொடுமைப்படுத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளாா்.

இந்நிலையில் நேற்று முன் தினம் குடி போதையில் வந்த தன்னுடைய கணவரிருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. மகேஸ்வாியை அடித்து கொடுமைப்படுத்த தொடங்கினாா் அவரது கணவா். அதுமட்டுமல்லாமல், அவரது  தாலியை பிடித்து இழுத்து உள்ளாா். இதனால் மகேஸ்வரிக்கு வலி தாங்க முடியவில்லை. ஆத்திரமடைந்த அவா் அருகிலிருந்த கேபிள் ஒயரால் தனது கணவாின் கழுத்தை இறுக்கி துடிதுடிக்க கொலை செய்தாா்.

we-r-hiring

இச்சம்பவம் தொடா்பாக அக்கம்பக்கத்தினா் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினா் மகேஸ்வாியை கைது செய்தனா். பின்னா் ராஜேஸ்குமாாின் உடலை பிரேத பாிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்

MUST READ