திமுக ஆட்சி மீண்டும் அமையும் போது 75 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வரலாறு மீண்டும் எழுதப்படும் என நாகர்கோவிலில் எம்.பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்துள்ளாா்.
குமரி கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, திமுக1957 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு, பின்னர் பேரறிஞர் அண்ணா தலைமையில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது எனக் குறிப்பிட்டார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு, தலைவர் கலைஞர் தலைமையில் கழகம் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததையும் அவர் நினைவுபடுத்தினார். ஆனால் 1977க்குப் பிறகு நீண்ட காலம் ஆட்சி திமுகவுக்கு வராத சூழலும், அதன் பின்னர் அதிமுக மற்றும் திமுக மாறி மாறி ஆட்சி அமைத்த வரலாறும் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி அமைந்ததையும், 2021 ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததையும் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய ஆட்சியில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் கழகம் ஆட்சியமைக்குமேயானால், இந்த 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு எழுதப்படும் என அவர் தெரிவித்தாா். அந்த வரலாறு தலைமைக்கு மட்டுமல்லாது, கட்சி நிர்வாகிகள் மற்றும் அடிப்படைத் தொண்டர்களுக்கும் பெருமை சேர்க்கும் எனவும் கூறினார்.
ஏனென்றால் கழகம் ஆட்சிக்கு வருவதற்குத் தலைமை முக்கியமானதாக இருந்தாலும், வாக்குகளைச் சேகரித்து உதயசூரியன் சின்னத்தை வெற்றிபெற வைக்கிற பெரும் பொறுப்பு நிர்வாகிகளின் கைகளில்தான் இருக்கிறது என்றாா். எனவே இந்த தேர்தலுக்கு நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
2026 தேர்தல் களம் -180 தொகுகளில் திமுக முன்னிலை…அக்னி நியூஸ் நிறவனத்தின் சர்வே ரிபோர்ட்…
