Homeசெய்திகள்தேர்தல் 20262026 சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு - முக்கிய அம்சங்கள்!

2026 சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு – முக்கிய அம்சங்கள்!

-

- Advertisement -

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் வெளியிட்டுள்ளார். மகளிர் மேம்பாடு, கல்வி மற்றும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.2026 சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு - முக்கிய அம்சங்கள்!தேர்தல் அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள்:

மகளிர் உரிமைத் தொகை: குடும்ப அட்டை வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 உரிமைத் தொகையாக அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

we-r-hiring

முதியோர் நலன்: முதியோர் உதவித்தொகை ரூ. 2,000-ஆக உயர்த்தப்படும். மேலும், அனைத்து நலத்திட்ட உதவிகளும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்படும்.

விவசாயிகள் நலன்: நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் இடஒதுக்கீடு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இடஒதுக்கீடு 10% ஆக உயர்த்தப்படும்.

பயிற்சி மையங்கள்: வருவாய் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலனுக்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேகப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

நவீனக் கல்வி மற்றும் AI: அரசுப் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்குத் தொழில்நுட்ப உதவியுடன் பாடங்கள் கற்பிக்கப்படும். மேலும், ஆசிரியர்களுக்குப் புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.

​தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸின் இந்த அறிவிப்புகள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

விஜய் என்.டி.ஏ.வில் சேர்ந்தால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் – செல்வப்பெருந்தகை

 

MUST READ