திமுக வேட்பாளர்கள் அமைச்சர் நாசர், அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
திமுகவைச் சேர்ந்த சா.மு.நாசர் (S.M. Nasar), திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவார். இவா் 2021 தேர்தலில் ஆவடியில் வெற்றி பெற்றார், தற்போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராகவும், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். 2016-ல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக வேட்பாளா் மாஃபா.பாண்டியராஜனை எதிா்த்து போட்டியிட்டு, தோல்வியடைந்தாா். அதன் பின்னா் 2021-ல் ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மே 2023-ல் ஆவின் பால் விநியோகம் தொடர்பான சர்ச்சை மற்றும் செயல்பாடுகள் காரணமாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், வருகின்ற 2026 சட்டமன்ற தோ்தலில் ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சா் நாசா் போட்டியிடுகிறாா். வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 06 ஆம் தேதி முடிவடையும் நிலையில் இன்று நாசர் ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.
மேலும் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ஆவடியில் மீண்டும் சா.மு. நாசர்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
